நடிகர் சார்லியின் இல்ல திருமண விழா..! சினிமா நட்சத்திரங்கள் நேரில் வாழ்த்து
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Sep 01, 2019 08:02 PM
பிரபல நடிகர் சார்லியின் மகன் ஆதித்யாவிற்கு இன்று சென்னையில் உள்ள பிரபல திருமண மண்டபத்தில் திருமணம் நடந்து முடிந்தது.
![Actor Charlie Son Adithya Amirtha Weeding Today At Chennai Actor Charlie Son Adithya Amirtha Weeding Today At Chennai](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/actor-charlie-son-adithya-amirtha-weeding-today-at-chennai-news-1.png)
பிரபல காமெடி நடிகர் மற்றும் குணச்சித்திர நடிகருமான சார்லி தன்னுடைய தனித்தன்மையான நடிப்பால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர்.
இயக்குனர் பாலச்சந்தர் இயக்கிய பொய்க்கால் குதிரை மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சார்லி பல முன்னணி பிரபலங்களுடன் நடித்து உள்ளார். மேலும் கடந்த சில வருடங்களாக குணச்சித்திர கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி தன் நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் இவரது மகன் ஆதித்யா விற்கு அமிர்தா என்ற பெண்ணுடன் சென்னையில் இன்று திருமணம் நடைபெற்றது. இத்திருமண விழாவில் பல தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
Tags : Charlie