Reliable Software
www.garudabazaar.com

வேறு சேனலுக்கும் செல்லும் செஃப் வெங்கடேஷ் பட்.. அவரே வெளியிட்ட பதிவு... குஷியில் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. இந்நிலையில் இந்த ஷோவிற்காக ரசிகர்கள் காத்திருந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய ரீச் அடைந்துள்ளது.

chef venkatesh bhat moves to this channel also வேறு சேனலுக்கு செல்லும்வெங்கடேஷ் பட்

இந்த பைனலில் யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், இந்த நிகழ்ச்சி முடிவடையப் போகிறது என்கிற ஏக்கம் தான் பலரது முகத்திலும் பார்க்கமுடிகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் பைனன்ஸ் நிகழ்ச்சி தற்போது நடந்து முடிந்துள்ளது. அதிலும் சர்ப்ரைஸாக நடிகர் சிம்பு இந்த பைனல்ஸ் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளாராம். இந்நிலையில் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வருகிற ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு அன்று மதியம் 2 மணி முதல் தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.

ஒவ்வொரு வாரமும் நகைச்சுவை கூடிக்கொண்டே தான் இருக்கிறதே தவிர, குறையவில்லை. தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள சீசன் 2-வில் கனி, ஷகிலா, பாபா பாஸ்கர், அஸ்வின், பவித்ரா ஆகியோர் இருக்கின்றனர். தமிழ் ரசிகர்களை மொத்தமாக கட்டிப் போட்டிருக்கும் இந்நிகழ்ச்சி தற்போது கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. 'குக் வித் கிறுக்கு'  என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியின் புரோமோ சமீபத்தில் வெளியானது. இதனை பார்த்த தமிழ்  ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் கன்னட குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கும் வெங்கடேஷ் பட் தான் நடுவராக இருந்து சிறப்பிக்க போகிறாராம். இந்த பதிவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் குஷியில் உள்ளனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி இன்னும் இரண்டு நாட்களில் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

chef venkatesh bhat moves to this channel also வேறு சேனலுக்கு செல்லும்வெங்கடேஷ் பட்

People looking for online information on Cooku with comali, Venkatesh Bhat will find this news story useful.