www.garudabazaar.com

"சாப்பாடே இறங்கல... அசல்க்கும் எனக்குமான ஃப்ரண்ஷிப் உங்களுக்கு புரியலடா.." நிவாஷினி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

couldnt eat nivashini about asal elimination bigg boss 6 tamil

Also Read | Rambha Car Accident: "கெட்ட நேரம்.. பிரார்த்தனை பண்ணுங்க".. விபத்துக்குள்ளான நடிகை ரம்பா சென்ற கார்..!

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

couldnt eat nivashini about asal elimination bigg boss 6 tamil

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

couldnt eat nivashini about asal elimination bigg boss 6 tamil

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். 

couldnt eat nivashini about asal elimination bigg boss 6 tamil

இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், அசீமா? அசலா? மகேஸ்வரியா? யார் வெளியேற்றப்படவிருக்கிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது, முதலில் மகேஸ்வரி எலிமினேட் செய்யப்படவில்லை என கமல் அறிவித்தார்.  இறுதியாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

couldnt eat nivashini about asal elimination bigg boss 6 tamil

இந்த நிலையில் அசலின் பிரிவு குறித்து பிக்பாஸ் வீட்டில் தனியே அமர்ந்து பேசிய நிவாஷினி, அழுதபடி, “எனக்கு சாப்பாடு இறங்கவில்லை. அசல் ஒண்ணுமே பண்ணவில்லை. இந்த வீட்டில் அவனை தான் எலிமினேட் செய்ய வேண்டுமா? சாப்பிடும் போதும் உன் ஞாபகம் தான் அசல் வருகிறது.

couldnt eat nivashini about asal elimination bigg boss 6 tamil

இந்த வீட்டில் எனக்கு ஒன்று என்றால் அசல்தான் ஓடி வருவான். ஓடி வந்து என்னிடம் பேசுவாள். நான் முழுமையாக சந்திரமுகியாக மாறிக் கொண்டே இருக்கிறேன். சத்தியமா நம்ம பிரெண்ட்ஷிப் பற்றி யாருக்கும் புரியாது அசல். டேய் உங்களுக்கு புரியலடா என்று தான் சொல்லவேண்டும். தூங்கி எழுந்ததும் நான் பார்க்கும் ஒரே முகம் அசல் முகம். இந்த வீட்டில் யாருமே இல்லையா எலிமினேட் செய்வதற்கு. உன்னை மிகவும் மிஸ் பண்ணுகிறேன் அசல்.” என்று குறிப்பிட்டார்.

couldnt eat nivashini about asal elimination bigg boss 6 tamil

Also Read | “செருப்பால அடிப்பேன்..” .. வெடிக்கும் தனலட்சுமி - ராபர்ட் சண்டை.. பரபரப்பில் ஹவுஸ்மேட்ஸ்.!

தொடர்புடைய இணைப்புகள்

couldnt eat nivashini about asal elimination bigg boss 6 tamil

People looking for online information on Asal nivashini, Bigg boss, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil will find this news story useful.