தல அஜித் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் டிரைலர் ஸ்பெஷல் ஸ்க்ரீனிங்கில் ரசிகர்கள் ஆவலுடன் ரசிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இயக்குநர் ஹெச்.வினோத் இயக்குகிறார். ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சுஜித், அஸ்வின் ராவ்,டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிரைலர் கடந்த ஜூன்.12ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்தது. இதையடுத்து, தல ஸ்பெஷலாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிரைலர் ஸ்பெஷலாக திரையிடப்பட்டது.
வெற்றி திரையரங்கில் இன்று மாலை 8 மணிக்கு திரையிடப்பட்ட நேர்கொண்ட பார்வை டிரைலரை காண ஏராளமான தல ரசிகர்கள் குவிந்தனர். படு உற்சாகத்துடன் தல ரசிகர்கள் ‘நேர்கொண்ட பார்வை’ டிரைலரை திரையில் கண்டு ரசித்த வீடியோவை தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி முன்கூட்டியே வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Theatrical trailer response for show at 8pm today at Vetri Chromepet, Chennai https://t.co/yHeheZwa0f
— Boney Kapoor (@BoneyKapoor) June 16, 2019