‘அன்று காதல் மன்னன்.. இன்று காதல் கணவன்’ - அஜித்தின் ரொமாண்டிக் பாடல் வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 13, 2019 02:13 PM
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அகலாதே’ என்ற காதல் பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கிய ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் கடந்த ஆக.8ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வெளியான 4 தினங்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.39 கோடி வசூல் செய்துள்ளது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரின் போனி கபூரின் பேவியூ புராஜக்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், அர்ஜுன் சிதம்பரம், ஆதிக் ரவிச்சந்தர், டெல்லி கணேஷ், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
'பெண் எப்படி இருந்தாலும் அவளிடம் அத்து மீற ஆணுக்கு உரிமை இல்லை, அவள் 'நோ' சொன்னால் அதன் அர்த்தம் 'நோ' தான்' என்பதை அழுத்தமாக கூறியிருக்கும் பெண் உரிமையை மையமாகக் கொண்ட இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்துள்ளார்.
இவர்களுக்கு இடையே இருக்கும் காதலையும், கணவன் - மனைவி பாசத்தையும் கூறும் ‘அகலாதே’ பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. பா.விஜய் எழுதிய இப்பாடலை ப்ரித்வீ, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
‘அன்று காதல் மன்னன்.. இன்று காதல் கணவன்’ - அஜித்தின் ரொமாண்டிக் பாடல் வீடியோ வீடியோ