www.garudabazaar.com

BREAKING: ஒரே படத்தில் ஜெய், ஜீவா & ஸ்ரீகாந்த்… சுந்தர் சி வைத்த catchy Title இதுதானா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுந்தர் சி இயக்கத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிக்கும் படத்தின் தலைப்புப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

Sundar C jiiva srikanth jai new movie title update

கமர்ஷியல் கிங் சுந்தர் சி…

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நகைச்சுவை மற்றும் கமர்ஷியல் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக இருப்பவர் சுந்தர் சி. அதற்கு அவரின் உள்ளத்தை அள்ளித்தா, வின்னர், கலகலப்பு, கிரி உள்ளிட்ட படங்களே சாட்சி. அதே நேரத்தின் அன்பே சிவம் போன்ற தரமான படங்களையும் இயக்கி தன் திறமையை நிரூபித்தவர். இடையில் நடிகராகவும் பல படங்களில் நடித்து கலக்கினார். இப்போது இயக்கம் நடிப்பு இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது நடிகராக வல்லான், பட்டாம்பூச்சி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் பட்டாம்பூச்சி படத்தில் ஜெய் ஒரு கொடூரமான சைக்கோ வில்லனாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இரு படங்களின் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது.

Sundar C jiiva srikanth jai new movie title update

நட்சத்திர பட்டாளம்…

சமீபத்தில் அரண்மனை படங்களின் வெற்றிக்குப் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் மூவரும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இது சுந்தர் சி யின் ஸ்டைலிலான ஜாலியான படம் என சொல்லப்பட்டது. இந்த படத்தை  குஷ்பூவின் Avni Cinemax தயாரிக்கிறது. இந்த படத்தில் ஜெய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூவரும் இணைந்து நடிக்கின்றனர். இவர்களுடன் திவ்யதர்ஷினியும் நடிக்கிறார். வழக்கமாக சுந்தர் சி யின் படத்தின் நட்சத்திர பட்டாளமே நடிக்கும். அதுபோலவே இந்த படத்திலும் யோகி பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

Sundar C jiiva srikanth jai new movie title update

Breaking Update…

இந்த படத்தின் புகைப்படங்கள் மற்றும் படப்பிடிப்புத் தள வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தனர் படக்குழுவினர். இந்நிலையில் இப்போது இந்த படத்தின் தலைப்புப் பற்றிய ஒரு தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்துக்கு ‘காஃபி வித் காதல்- coffee with Kadhal’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.  மற்றொரு சுவார்ஸ்ய தகவலாக இந்த படத்தில் வின்னர் படத்துக்குப் பிறகு 19 ஆண்டுகள் கழித்து யுவன் – சுந்தர் சி கூட்டணி இணைந்துள்ளது.

Sundar C jiiva srikanth jai new movie title updatehttps://behindwoods.com/bgm8

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

BREAKING: ஒரே படத்தில் ஜெய், ஜீவா & ஸ்ரீகாந்த்… சுந்தர் சி வைத்த CATCHY TITLE இதுதானா? வீடியோ

Tags : Jai, Jiiva, Srikanth

தொடர்புடைய இணைப்புகள்

Sundar C jiiva srikanth jai new movie title update

People looking for online information on Jai, Jiiva, Srikanth will find this news story useful.