KAAPAN USA OTHERS

பிகில் இசையை தொடர்ந்து Big நியூஸ் - தளபதி 64 குறித்த முக்கிய தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘பிகில்’ திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘தளபதி 64’ திரைப்படத்தின் ஷூட்டிங் பிளான் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

After Bigil Thalapathy 64 Lokesh shoot start from Oct 3

‘தெறி’, ‘மெர்சல்’ படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லி-விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (செப்.19) பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விஜய் நடிக்கவிருக்கும் ‘தளபதி 64’ திரைப்படத்தை ‘மாநகரம்’,‘கைதி’ படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார். சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரிக்கும் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், எடிட்டர் பிலோமின்ராஜ், இசையமைப்பாளர் அனிருத், ஆகியோர் இப்படத்தில் பணிபுரியவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘தளபதி 64’ படம் பற்றி நமக்கு கிடைத்த கூடுதல் தகவலின்படி, இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் வரும் அக்.3ம் தேதி முதல் தொடங்கும் என தெரிகிறது. இப்படத்தை வரும் 2020ம் ஆண்டு தமிழ் புத்தாண்டிற்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.