'வழக்கமா சூப்பர் ஹீரோ மாதிரி பண்ணுவாரு இந்த வாட்டி ஒரு படி மேல...' - விஜய் குறித்து ரஹ்மான்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 19, 2019 09:49 PM
அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது. விழாவில் பிகில் படம் குறித்து தளபதி விஜய்யுடன் பணிபுரிந்த அனுபவங்கள் குறித்தும் பிரபலங்கள் மேடையேறி பேசி வருகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக மேடையேறிய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சிங்கப்பெண்ணே பாடலை பாடினார். அவர் பாடிய போது அரங்கம் அதிர்ந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் பாடிய பிறகு தொகுப்பாளரான மிர்ச்சி சிவாவின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது மிர்ச்சி சிவா, ''நீங்களும் விஜய் சாரும் மீட் பண்றப்போ பேசிப்பிங்களா ? இல்லையா ? என்று ஜாலியாக கேள்வி கேட்டார். மேலும் பிகில் படம் பற்றி உங்கள் அனுபவங்களை கூறுங்கள் என்றார்.
அதற்கு பதிலளித்த ரஹ்மான், ''வழக்கமா சூப்பர் ஹீரோஸ் மாதிரி பண்ணுவாரு. இந்த வாட்டி இன்னொரு படி மேல போய்ட்டாரு தளபதி'' என்றார். பின்னர் 'நீங்க ஏன் சார் ஒரு வார்த்தை, ரெண்டு வார்த்தையில பேசுறீங்க ?' என சிவா கேட்க, அதற்கு, 'மத்தவங்க பேசணும்ல' என்று ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளித்தார்.