"என்னது?.. அப்படி இல்லயா?".. Elimination விவகாரத்தில் ஆக்ஷன் கிங் கொடுத்த சென்சேஷனல் Twist தெரியுமா?!
முகப்பு > சினிமா செய்திகள்ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ சர்வைவர்.

பொதுவாகவே சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அதிலும் திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டு பல்வேறு ரிஸ்க் நிறைந்த டாஸ்குகளை செய்யும் வகையான ரியாலிட்டி ஷோக்களுக்கு எப்போதுமே ஒரு நல்ல வரவேற்பும் எதிர்பார்ப்பும் உள்ளது.
இந்த ஷோக்கள் மிக விரைவில் சென்சேஷனலாகவும், மக்களிடையே தீவிரமாகவும் சென்றடையக்கூடிய நிகழ்ச்சிகளாக மாறிவிடுகின்றன. அந்த வகையில் ரியாலிட்டி கொஞ்சம் மற்றும் சினிமாத்தனம் கொஞ்சம் என கலந்து உருவாகி, ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும், மிகமுக்கியமான ரியாலிட்டி ஷோ சர்வைவர்.
பிரபல முன்னணி நட்சத்திரங்கள் நந்தா, விஜயலட்சுமி, விக்ராந்த், சிருஷ்டி டாங்கே, இந்திரஜா மற்றும் பலர் பங்கேற்று இருக்கும் இந்த ரியாலிட்டி ஷோவை ஆக்ஷன் கிங் நடிகர் அர்ஜுன் வழி நடத்திச் செல்கிறார். இந்நிலையில்தான் இந்த ஷோ தற்போது இன்னும் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது.
ஆம். தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சர்வைவல் ரியாலிட்டி ஷோவில் தற்போது எலிமினேஷன் ரவுண்ட் தொடங்கியிருப்பது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கான ப்ரோமோக்கள் தற்போது அடுத்தடுத்து வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த ரவுண்டில் யாரெல்லாம் எலிமினேட் ஆவார்கள் என்பது குறித்து, ரசிகர்களிடம் ஆர்வம் தொற்றிக் கொண்டிருக்கிறது.
அதன்படி காடர்கள் தீவு மற்றும் வேடர்கள் தீவு என்று இரண்டு அணிகளாக தற்போது போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டு இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும்போது பார்க்கக்கூடிய அதே நாமினேஷன் ப்ராசஸை நினைவுபடுத்தும் ப்ராசஸ்தான் இங்கும் நடப்பதாக கூறப்பட்டது.
அந்த வகையில் இந்த எலிமினேஷன் ரவுண்டில் நடிகை சிருஷ்டி டாங்கே பெயரும், இந்திரஜாவின் பெயரும் பலவீனமான போட்டியாளர்களாக இருக்கிறார்களா? என பேசப்பட்டு வருகிறது. பலர் இவர்களுக்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர். இதில் இந்திரஜா, அட்லீ இயக்கத்தில் ‘தளபதி’ விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தில் ‘பாண்டியம்மாள்’ என்கிற கேரக்டரில் நடித்து அசத்தி நம்மையெல்லாம் கவர்ந்தவர்.
இவர் விஜய் டிவி மூலம் பிரபலமாகி முன்னணி திரைப்படங்களில் நடித்துவரும் காமெடி நடிகரும் - தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘கன்னித்தீவு - உல்லாச உலகம் 2.0’ நிகழ்ச்சியில் கலக்கிக் கொண்டு வருபருமான ரோபோ ஷங்கரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சர்வைவர் ஷோவில் எலிமினேஷன் குறித்த மேற்கண்ட விஷயங்களை எல்லாம் சுக்குநூறாக்கும் வகையில் அடுத்த ப்ரோமோவில் மிகப் பெரிய ட்விஸ்ட்டினை அர்ஜுன் கொடுத்திருக்கிறார்.
அதன்படி அனைவரும் போட்ட ஓட்டு செல்லாது என்றும், பழங்குடித் தலைவர் யாரை நாமினேஷன் செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறாரோ அவர்கள்தான் எலிமினேட் ஆக வேண்டும் என்றும் அதிரடியாக கூறி விட்டார் அர்ஜூன்.
இதில் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி ஒரு பழங்குடி தலைவராகவும், இன்னொருபுறம் காயத்ரி இன்னொரு பழங்குடி தலைவராகவும் இருக்கின்றனர்.
இவர்கள் யாரை நாமினேட் செய்யப்போகிறார்கள் என்பதை வைத்து எலிமினேஷன் ப்ராசஸை முடிவு செய்யவிருப்பதாக அர்ஜுன், ஷோவில் தெரிவித்திருக்கிறார்.
அதே சமயம் சிருஷ்டி டாங்கே, இந்திரஜா என யாரும் எலிமினேட் ஆவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கூறி வருகின்றனர்.
அதன்படி, “முதல் வாரமே இப்படி எலிமினேட் செய்வார்களா? கொஞ்சம் அலெர்ட் கொடுக்கிறார்கள். நிச்சயமாக இந்த வாரம் எலிமினேஷனுக்கு வாய்ப்பு குறைவுதான்” என்று ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். என்ன நடக்கிறது என்பதை இன்றைய இரவு எபிசோடில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.
மிகச் சமீபத்தில்தான் விக்ராந்துடன், காயத்ரிக்கு கொஞ்சம் முரண்கள் எழுந்திருக்கின்றன. இந்த சூழலில் எலிமினேட் ஆகப்போவது யார் என்கிற பரபரப்பில் சர்வைவர் ஷோ ரசிகர்கள் ஆழ்ந்துள்ளனர்.