"சனம் ஷெட்டியின் Ex-Boyfriend..Night Party.. மிரட்டல்" - எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்கு, தர்ஷன் ஓப்பன் டாக்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் தர்ஷன் மீது சனம் ஷெட்டி வைத்து புகாருக்கு, தர்ஷன் தன் தரப்பில் விளக்கம் கொடுத்துள்ளார்.

Biggboss tharshan opens over the allegations made by sanam shetty

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழகமெங்கும் பிரபலமானவர் தர்ஷன். இவர் கதம் கதம், சவாரி உள்ளிட்ட படங்களில் நடித்த சனம் ஷெட்டியை காதலித்து வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் தர்ஷன் பிக்பாஸுக்கு போய் வந்த பின்பு மாறிவிட்டதாகவும், நிச்சயதார்த்தம் செய்துவிட்டு, கல்யாணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றியதாகவும் சனம் ஷெட்டி புகார் கூறினார். மேலும் தர்ஷன் மீது சீட்டிங், ஃப்ராடு, பெண்ணை துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளில் கமிஷனர் ஆபீசில் சனம் ஷெட்டி புகாரளித்தார்.

இந்த நிலையில், சனம் ஷெட்டியின் புகாருக்கு தன் தரப்பில் தர்ஷன் விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பிரஸ் மீட்டில், 'பிக்பாஸ் போவதற்கு முன்பு எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது உண்மை தான். ஆனால் என் தங்கை கல்யாணம் முடியட்டும், பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று தான் சனம் ஷெட்டியிடம் சொன்னேன். அதுமட்டுமில்லாமல், நான் பிக்பாஸ் முடிந்து வந்த பிறகு, எங்களுக்குள் நிச்சயதார்த்தம் ஆனதை அவர் வெளிப்படையாக அறிவிக்க சொன்னார், மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னுடன் கலந்து கொண்ட நடிகைகளிடம் நான் பேச கூடாது, பொது இடங்களுக்கு தன்னையும் அழைத்து செல்ல வேண்டும் என சனம் ஷெட்டி என்னை வற்புறுத்தினார். அத்துடன் நான் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது, சனம் ஷெட்டி தனது ex boyfriend உடன் இரவு பார்ட்டிக்கு சென்றிருக்கிறார். இது போன்ற காரணங்களால் தான் நான் சனம் ஷெட்டியை பிரிய முடிவெடுத்தேன். ஆனால் சனம் ஷெட்டி தற்கொலை செய்து கொள்வேன் என என்னை மிரட்டினார். எல்லாவற்றுக்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது, தேவைப்பட்டால் அதை கமிஷனர் ஆபீசில் காட்டுவேன்' என தர்ஷன் கூறியுள்ளார்.

Entertainment sub editor