“Friends-ஆ? நரிக்கூட்டம்” .. ஹவுஸ்மேட்ஸ் குறித்து ராபர்ட் மாஸ்டர் சொன்னது என்ன? bigg boss 6
முகப்பு > சினிமா செய்திகள்ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
![Robert master view about housemates bigg boss 6 tamil Robert master view about housemates bigg boss 6 tamil](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/robert-master-view-about-housemates-bigg-boss-6-tamil-photos-pictures-stills.jpeg)
Also Read | Baba : ‘உப்பிட்ட தமிழ் மண்ணை’ பாடல்.. ‘ரஜினியும் தமிழும்’ வரிகள் குறித்து சுரேஷ் கிருஷ்ணா.!
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வைல்டு கார்டு எண்ட்ரியாக மைனா பங்கேற்றுள்ளார்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலியே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். இதற்கு அடுத்த கட்டமாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். அதன்பிறகு அடுத்த வாரத்தில் ஷெரினா, அதன் பின்னர் மகேஸ்வரி வெளியேறினர். கடைசியாக நிவாஷினி, ராபர்ட் ஆகியோர் வெளியேறியுள்ளனர். இந்த நிலையில், 50வது நாளன்று ஞாயிற்று கிழமை எபிசோடில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறுவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து வெளியேவந்த ராபர்ட்டை கமல்ஹாசன் வரவேற்றதுடன், “உள்ளே இருந்த அனுபவம் எப்படி இருந்தது?” என கேட்டார். அதற்கு ராபர்ட் மாஸ்டரோ, “அய்யயோ.. வேற லெவல் அனுபவம். உள்ள இருந்து பார்த்தா தெரியும். சுத்தி எல்லாம் நரிக்கூட்டம்” என்று கூறினார். அப்போது கமல், ‘உள்ள எல்லாரும் ஃப்ரண்ட்ஸ்னு சொன்னீங்க?’ என்று கேட்க, அதற்கு ராபர்ட் மாஸ்டரோ, ‘நண்பர்னா அது அமுதவாணனை சொல்லலாம். அப்றம். என் மகள் குயின்சி.. அவ்வளவுதான்’ என்று கூறினார். இது தற்போது வைரலாகி வருகிறது.
இதனிடையே வீட்டை விட்டு வெளியேறிய ராபர்ட் மாஸ்டர், “ஹாய் எல்லாருக்கும் வணக்கம். நான் ராபர்ட் மாஸ்டர் பேசுறேன். இப்போ பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தாச்சு. பிக்பாஸ் உள்ள இருக்கும் போது எனக்கு ஓட்டு போட்ட எல்லாருக்கும், என் ரசிகர்கள், நண்பர்கள், குட்டீஸ், அம்மா, அப்பா எல்லாரும் ஓட்டு போட்டுருக்கீங்க. உங்கள் ஆதரவுக்கு நன்றி!” என தெரிவித்துள்ளார். முன்னதாக கமல்ஹாசன், ராபர்ட் மாஸ்டரை வழி அனுப்பும்போது ‘ரொம்ப எதிர்பார்த்தேன்” என்று சொல்லி அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | Divya Sridhar : நடிகை திவ்யா ஸ்ரீதருக்கு சர்ப்ரைஸ் வளைகாப்பு.. நெகிழவைத்த ‘செவ்வந்தி’ சீரியல் டீம்!