www.garudabazaar.com

பிக்பாஸ் யாஷிகா நடிப்பில்., Fresh-ஆக வெளியான ரோஜா சீரியல் ப்ரொமோ வீடியோக்கள்.! - செம ரெஸ்பான்ஸ்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை யாஷிகா ஆனந்த் நடித்துள்ள ரோஜா சீரியலின் ப்ரொமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளன. 

யாஷிகா ஆனந்த் நடிப்பில் ரோஜா சீரியல் ப்ரொமோ | biggboss fame actress yashika anand starring roja serial new promo is out

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இவர் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 

யாஷிகா ஆனந்த் நடிப்பில் ரோஜா சீரியல் ப்ரொமோ | biggboss fame actress yashika anand starring roja serial new promo is out

சன் டிவியில் சிபு சூரியன், ப்ரியங்கா, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்து சூப்பர் ஹிட் அடித்துள்ள சீரியல் ரோஜா. கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டதால், சீரியல்களின் ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து வரும் 27-ஆம் தேதி முதல், மீண்டும் சின்னத்திரை சீரியல் ஒளிபரப்பு தொடங்கவிருக்கிறது. 

இதையடுத்து ரோஜா சீரியலில் 27 முதல், யாஷிகா நடித்துள்ள புதிய எபிசோட்கள் ஒளிபரப்பப்படவுள்ளன. இதன் ப்ரொமோ வீடியோக்கள் தற்போது அதன் யூடியூப் சேனலில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. சினிமா நட்சத்திரமான யாஷிகா சின்னத்திரை சீரியலில் நடித்திருப்பதால், ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.

 

யாஷிகா ஆனந்த் நடிப்பில் ரோஜா சீரியல் ப்ரொமோ | biggboss fame actress yashika anand starring roja serial new promo is out

People looking for online information on Roja Serial, Yashika Aannand will find this news story useful.