''கேன்சரை வென்ற 6 வயது சிறுவனின் சிரிப்பை பாருங்கள்..'' - பிக்பாஸ் கவின் பகிர்ந்த எமோஷனல் வீடியோ.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு எமோஷனலான வீடியோவை பதிவிட்டுள்ளார்.

சின்னத்திரை சீரியலில் அறிமுகமானவர் கவின். இதையடுத்து இவர் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களிடையே பிரபலமானார். மேலும் இவர் நட்புனா என்னன்னு தெரியுமா என்கிற படத்தில் ஹீரோவாக நடித்தார். தற்போது அம்ரிதா ஐயருடன் இணைந்து லிஃப்ட் என்கிற படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு எமோஷனல் வீடியோவை வெளியிட்டுள்ளார். 6 வயதான சிறுவன், தனக்கு வந்த கேன்சரை வென்று, மீண்டும் பள்ளிக்கு திரும்பு பொழுது, அனைவரும் அவனை கைத்தட்டி வரவேற்க, சிறுவன் புன்னகையுடன் வருகிறான். இந்த நெகிழச் செய்யும் வீடியோவை பகிர்ந்த கவின், ''அந்த சிரிப்பை பாருங்கள்'' என ட்விட்டியுள்ளார். கவினின் இந்த பதிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Look at that smile.. ❤️❤️❤️ pic.twitter.com/iA6aA8Pleo
— Kavin (@Kavin_m_0431) March 30, 2020