NTR-க்கு அப்றம் இந்த வேடத்தில் நடிக்கும் நடிகர்.. இயக்கும் பிரபல திரைப்பட & சீரியல் நடிகை!
முகப்பு > சினிமா செய்திகள்திருப்பதி வெங்கடாஜலபதி மற்றும் பகவான் பாலாஜியின் புராண வரலாறு தமிழ் மற்றும் தெலுங்கிலும் திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

சீனிவாசப்பெருமாள் எப்படி திருப்பதி வெங்கடாஜலபதி ஆனார் என்பதை விளக்கும் வகையில் இந்த படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி வேடத்திலும் மற்றும் ஸ்ரீனிவாசன் வேதவன் மகா விஷ்ணு வேடத்திலும் ஆரியன் ஷாம் நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்காக முழுமையாக விரதம் இருந்து இந்த திருப்பதி பாலாஜி வேடத்தை ஆரியன் ஷாம் ஏற்று நடித்திருக்கிறார்.
தெலுங்கில் அதிகமாக கிருஷ்ணர் வேடத்தை ஏற்று நடித்து புகழ்பெற்றவர் நடிகர் என்.டி. ராமாராவ். தமிழிலும் முருகன் மற்றும் திருமால் வேடங்களை நடிகர் சிவகுமார் ஏற்று நடித்தது போல், சிவாஜி நடித்த கர்ணன் திரைப்படத்தில் கிருஷ்ணர் வேடத்தை ஏற்று நடித்து புகழ் பெற்றவர் என்.டி. ராமாராவ். அவருக்குப் பிறகு அந்த வேடத்தை முழுமையாக ஏற்று தற்போது நடித்திருக்கும் இளம் நடிகர் ஆர்யன் ஷாம்.
விரைவில் வெளிவரவிருக்கும் ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் வழங்கும் ‘அந்த நாள்’ எனும் திரைப்படத்தில் நாயகனாக ஆர்யன் ஷாம் நடித்து வருகிறார். இவர் இந்தியன் வங்கியின் நிறுவனர் மறைந்த கிருஷ்ணசாமியின் கொள்ளுப் பேரன் ஆவார். அவர் சுவாமி விவேகானந்தரின் புகழ்பெற்ற சிகாகோ பயணத்திற்கு முழு நிதி உதவியின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அங்கு இந்து மதத்தை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தினார்.
தவிர, இப்படத்தில் மகாலட்சுமியாக அதிதியும் பத்மாவதி தேவியாக சந்தியாஸ்ரீயும் நடித்திருக்கிறார்கள். இந்தப்படத்தின் ஒளிப்பதிவை எஸ். ஆனந்த்பாபு கவனித்திருக்கிறார். இசையை திவாகர் சுப்பிரமணியம் பக்தி ஊட்டும் வகையில் அமைத்திருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தை சீரடி சாய்பாபா, ரமண மகரிஷி, ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற இந்தியாவின் தலைச்சிறந்த மகான்கள் பற்றி பல நாடகங்களை நடத்தி, கலைமாமணி விருது பெற்ற நடிகை ஞானம் பாலசுப்பிரமணியம் (என்கிற பாம்பே ஞானம்) இயக்கியிருக்கிறார்.
ஆஹா, நளதமயந்தி, அழகிய தமிழ் மகன், ஜிகர்தண்டா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை பாம்பே ஞானம் கோலங்கள், சிதம்பர ரகசியம் உள்ளிட்ட புகழ்பெற்ற சீரியல்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.