பிரபல தொடரில் மீனாவுடன் அப்பவே நடித்துள்ள பிக்பாஸ் பாலாஜி... என்ன தொடர் தெரியுமா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். ஆயிரம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் பாலா இல்லை என்றால் இந்த சீசன் இவ்வளவு விறுவிறுப்பாக சென்று இருக்காது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மிக முக்கியமான போட்டியாளராக மாறியிருக்கிறார் பாலாஜி. ஆரம்பத்தில் அமைதியாக இருந்து, பின்பு இருந்து 'Simply waste' என்ற பட்டத்தை பெற்றவுடன் அவருக்கு போட்டியின் மீதான ஆர்வம் அதிகமாகியது. அதன் பிறகு பல அதிரடிகளை செய்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.

biggboss balaji acted with meena மீனாவுடன் நடித்துள்ள பிக்பாஸ் பாலாஜி

இந்நிலையில் 2017ம் ஆண்டு பாலாஜி விஜய் டிவியில் ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். 'கனெக்ஷன்' என்ற பிரபலமான நிகழ்ச்சியில் அவர், பிக்பாஸ் நடிகை யாஷிகா ஆனந்த் உடன் பங்கேற்ற வீடியோ சமீபத்தில் வைரலானது. அதேபோல் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ், பிரபல நடிகை மீனாவுடன் ஜீ ஆப்பில் வெளியான ஒரு வெப்சீரிஸில் நடித்துள்ளார். ஆம் 'கரோலின் காமாக்ஷி (Karoline Kamakshi)' என்றஅந்த தொடரில் பாலாஜி முருகதாஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

biggboss balaji acted with meena மீனாவுடன் நடித்துள்ள பிக்பாஸ் பாலாஜி

Tags : Meena, Balaji

தொடர்புடைய இணைப்புகள்

biggboss balaji acted with meena மீனாவுடன் நடித்துள்ள பிக்பாஸ் பாலாஜி

People looking for online information on Balaji, Meena will find this news story useful.