வீடியோ கேம் விளையாடும் மகன்... செல்லமாய் தொந்தரவு செய்யும் விஜய்... வைரலாகும் புகைப்படம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் தளபதியாய் உயர்ந்து நிற்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்புக்கும் நடனத்திற்கும் பல கோடி பேர் ரசிகர்களாக இருக்கின்றனர். சமீபத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்த மாஸ்டர் ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர் ஜனவரி 13 அன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Actor Vijay cute photo with son jason goes viral வைரலாகும் விஜய் மற்றும் மகன் புகைப்படம்

இந்நிலையில் விஜய் பற்றி எந்த செய்தி வெளியானாலும் அது சீக்கிரமே வைரலாவது வழக்கம். அவர்  பொதுவாகவே சமூக வலைதளங்களில் பதிவிடுவது அரிது. அப்படி அவர் ஒரே ஒரு வார்த்தை பதிவிட்டாலும் அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து விடுகின்றனர். அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. தனது மகன் ஜேசன் சஞ்சய் உடன் அவர் இயல்பாக விளையாடி சிரித்துக் கொண்டிருக்கும் அந்த புகைப்படம் பார்ப்பவர்களை கவர்ந்துள்ளது.

Actor Vijay cute photo with son jason goes viral வைரலாகும் விஜய் மற்றும் மகன் புகைப்படம்

அவருக்கு சங்கீதா என்ற மனைவியும், ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என்று இரு பிள்ளைகள் இருக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அவரது மகன் 'வேட்டைக்காரன்' திரைப்படத்தில் விஜய்யயுடன் ஒரு பாடலில் தோன்றியிருப்பார். இந்நிலையில் அவர் நடிப்பு சம்மந்தமாக கனடாவில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திரையிலும் சரி, நிஜத்திலும் விஜய்யின் செல்ல குறும்புகள் ரசிக்கும் படி இருக்கிறது என்று அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Tags : Vijay

தொடர்புடைய இணைப்புகள்

Actor Vijay cute photo with son jason goes viral வைரலாகும் விஜய் மற்றும் மகன் புகைப்படம்

People looking for online information on Vijay will find this news story useful.