இதைத்தான் இவ்ளோ நாள் 'ஓட்டிட்டு' இருந்தீங்களா?... ரசிகர்கள் கேள்வி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோழி டாஸ்க்கில் வெறித்தனமாக விளையாடி காசு சேர்த்த பாலாஜிக்கு ஸ்பெஷல் பவர் ஒன்று அளிக்கப்படும் என ஏற்கனவே பிக்பாஸ் தெரிவித்து இருந்தார். தற்போது டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்று வருவதால் ரசிகர்கள் பலரும் அந்த சிறப்பு பவர் என்னவாக இருக்கும்? என ரூம் போட்டு யோசித்தனர். பாலாஜி ரசிகர்களோ கண்டிப்பா ஏதாவது பெருசா தான் இருக்கும் என நினைத்து இருந்தனர்.

Bigg Boss given Special Power to Balaji, Netizens Reacts

இந்த நிலையில் நேற்று அந்த சிறப்பு பவரை பிக்பாஸ் அளித்தார். அங்க பிரதட்சணம் போல டாஸ்க் ஒன்றை அளித்த பிக்பாஸ் ஆரி, சோம், கேபி இவர்கள் மூவரில் நீங்கள் விரும்பும் நபருடன் போட்டியிடலாம் என பிரம்மாஸ்திரம் போன்ற ஒன்றை அளித்தார். இதைக்கேட்ட பாலாஜி தன்னுடன் போட்டியிட கேபியை தேர்வு செய்தார். ஆனால் இதில் கேபி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று விட்டார்.

மேலும் இந்த டாஸ்கில் அவர் 2-ம் இடம் பிடித்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் இதுக்குத்தான் இவ்ளோ சீனா என பிக்பாஸை கிண்டலடித்து வருகின்றனர். இதைப்பார்த்த பாலாஜி ரசிகர்கள் இதெல்லாம் போங்காட்டம் பிக்பாஸ் என போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். என்ன ஒரு வில்லத்தனம்?

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss given Special Power to Balaji, Netizens Reacts

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.