www.garudabazaar.com

புதிய படத்தில் ஹீரோ, ஹீரோயினாக ஜோடி சேரும் Bigg Boss அமீர் - பாவனி.! Viral Video

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமீர் & பாவனி நடிக்கும் புதிய படத்தின் பூஜை வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

Biggboss Amir Pavani Reddy New Film Poojai Video

தமிழில் சின்னத்தம்பி சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமானவர் பாவனி. ஹைதராபாத்தை சேர்ந்தவரான இவர் ரெட்டை வால் குருவி, பாசமலர், தவனை முறை வாழ்க்கை, ராசாத்தி, அன்பே சிவம் ஆகிய தொடர்களிலும் நடித்திருக்கிறார். பிக்பாஸ் சீசன் 5ல் கலந்துகொண்டு ஏராளமான மக்களை கவர்ந்தார் பாவனி.

இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கோரியோகிராஃபரான ஆமீருடன் நட்பாக பழகிவந்த இவர் பின்னர் இருவரும் காதலிப்பதாகவும் அறிவித்திருந்தனர். 

சமீபத்தில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான துணிவு படத்தில்  பாவனி மற்றும் ஆமிர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அமீர் & பாவனி இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் ஹீரோ & ஹீரோயினாக நடிக்கிறார்கள். இந்த புதிய படத்தினை அமீர் இயக்க, பால கிருஷ்ணன் தயாரிக்க உள்ளார். இதற்கான பூஜை NFDC தாகூர் பிலீம் சென்டரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

புதிய படத்தில் ஹீரோ, ஹீரோயினாக ஜோடி சேரும் BIGG BOSS அமீர் - பாவனி.! VIRAL VIDEO வீடியோ

Tags : Amir, Pavani

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss Amir Pavani Reddy New Film Poojai Video

People looking for online information on Amir, Pavani will find this news story useful.