www.garudabazaar.com

"Ticket To Finale".. பிக் பாஸின் Super அறிவிப்பு.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.. அடுத்து என்ன நடக்கும்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Bigg boss ticket to finale announced contestants new task

Also Read | VIDEO: "என் பூர்வீகம் கேரளா.. அதான் VTV ஜெஸ்ஸி".. மனம் திறந்த நடிகை த்ரிஷா!

அப்படி ஒரு சூழலில், இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

சமீபத்தில் மணிகண்டா ராஜேஷ் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னர் தற்போது 8 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். விரைவில் Finale வர உள்ளதால், அடுத்தடுத்து எந்தெந்த போட்டியாளர்கள் முன்னேறி செல்வார்கள் என்பதை அறியவும் பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர்.

Bigg boss ticket to finale announced contestants new task

இதற்கு மத்தியில் நாமினேஷன் டாஸ்க்கிற்கு புதிய முறையையும் கையாண்டுள்ளது பிக் பாஸ். பொதுவாக ஒவ்வொரு போட்டியாளர்களும் மற்ற போட்டியாளர்கள் பெயர்களை குறிப்பிட்டு நாமினேஷன் செய்வார்கள்.

Bigg boss ticket to finale announced contestants new task

ஆனால் இந்த முறை ஒவ்வொரு போட்டியாளரும் தங்கள் இத்தனை நாட்கள் பிக் பாஸ் வீட்டில் விளையாடி மக்களை எப்படி எல்லாம் சுவாரஸ்யப்படுத்தினார்கள் என்பது குறித்து பேச அதன் அடிப்படையில், ஒரு நபர் நாமினேஷனில் இருந்து விடுவிக்கப்படுவார் என்றும் பிக் பாஸ் தெரிவிக்கிறார். சில விதிமுறைகளுடன் தங்களைப் பற்றி போட்டியாளர்கள் பேச வேண்டும் என பிக் பாஸ் குறிப்பிட, அனைத்து போட்டியாளர்களும் அதற்கேற்ப பேசுகின்றனர். இதன் இறுதியில், சுமார் ஒன்றரை மணி நேரம் பேசிய அசிம், நாமினேஷன் ப்ரீ Zone-இல் வெற்றி பெற்றதாக பிக் பாஸ் அறிவித்தார்.

Bigg boss ticket to finale announced contestants new task

மறுபக்கம், இந்த வார கேப்டனாக ADKவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்படியாக பிக் பாஸ் வீடு அடுத்தடுத்து விறுவிறுப்பான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதற்கு மத்தியில், அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது ஆரம்பமாகி உள்ளதாக தெரிகிறது.

Bigg boss ticket to finale announced contestants new task

நிறைய கடினமான போட்டிகள் உள்ளிட்டவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வார இறுதியில், அதிக Tiles கொண்டு தடம் பதிக்கும் நபர், Finale சுற்றுக்கு தகுதி பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Bigg boss ticket to finale announced contestants new task

மேலும், அனைத்து போட்டியாளர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் எந்த போட்டியாளர் முதல் ஆளாக இறுதி சுற்றுக்கு முன்னேறுவார் என்பதை அறியவும் ஆவலாக உள்ளனர்.

Also Read |  "கிளைமாக்ஸ்ல விஜய் நடிப்பு ரொம்ப எமோஷனலா இருக்கும்".. பிரபல வாரிசு பட நடிகை EXCLUSIVE!

தொடர்புடைய இணைப்புகள்

Bigg boss ticket to finale announced contestants new task

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tami, Bigg Boss Tamil, Bigg boss ticket to finale will find this news story useful.