www.garudabazaar.com

ராமேஸ்வரம் ரயிலில் வாரிசு படத்தின் ப்ரோமோஷன்.. வண்டி முழுக்க தளபதி தான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி முடித்துள்ளார்.

Vijay Varisu Movie Promotion on Chennai Rameshwaram Train

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Vijay Varisu Movie Promotion on Chennai Rameshwaram Train

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 24.12.2022 அன்று நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ,  இயக்குநர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Vijay Varisu Movie Promotion on Chennai Rameshwaram Train

இந்நிலையில் வாரிசு படத்தின் ப்ரோமோஷன் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மெட்ரோ ரயிலில் வாரிசு படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. தற்போது 16751/16752 சென்னை எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வாரிசு படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by MSRAILFANS (@msrailfans)

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Varisu Movie Promotion on Chennai Rameshwaram Train

People looking for online information on ராமேஸ்வரம், Egmore to Rameshwaram, Train No 1675116752, Varisu, Vijay will find this news story useful.