Bigg Boss Tamil 3 : சீக்ரெட் ரூமில் சாக்ஷி? - முன்னாள் பிக் பாஸ் பிரபலம் Predicts
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 30, 2019 05:35 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடந்த கிராமிய டாஸ்கில் மதுமிதா மற்றும் சாண்டி இடையே ஏற்பட்ட சண்டை குறித்து முன்னாள் பிக் பாஸ் பிரபலம் காஜல் கருத்து தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் வீடு பாம்புப்பட்டி, கீறிப்பட்டி என இரு கிராமங்களாக பிரிக்கப்பட்டு டாஸ்குகள் கொடுக்கப்பட்ட நிலையில், மதுமிதா மற்றும் சாண்டி இடையே ஏற்பட்ட சண்டை விஸ்வரூபம் எடுத்தது. விளையாட்டாக சாண்டி கலாய்த்ததில் ஹர்ட் ஆன மதுமிதா கோபத்தின் உச்சத்தில் சாண்டியை ஆம்பளையா? என கேட்டு காரி துப்பிய விவகாரம் பரபரப்பானது.
இந்நிலையில், Behindwoods-ன் Personals வித் தாரா நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட காஜல் பசுபதி, பிக் பாஸ் ஷோவில் மதுமிதா நடந்துக் கொண்ட விதம் குறித்து ஆவேசமாக தனது கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டார். அவர் பேசுகையில், ‘ஒருவர் மீது காரி துப்புவதும் மிகவும் மோசமான செயல். ஒருவரை அடித்தால் கூட அதனை ஏற்றுக் கொள்ளலாம் ஆனால், துப்புவது ஒழுக்கமற்ற செயல்’ என்று காஜல் தெரிவித்தார்.
மேலும், சாண்டியின் பெயரை கெடுக்க வேண்டும் என்றே மதுமிதா இப்படி செய்ததாக காஜல் குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் முகத்தில் பேஸ்ட் தடவியது தான் தான் என்று சாக்ஷி ஒப்புக் கொண்டும் கூட மதுமிதா சாண்டி மீது குற்றம்சாட்டினார். இதனை கமல்ஹாசனும் கேள்வி கேட்காதது வருத்தமளிப்பதாக காஜல் கூறினார்.
வரும் வாரம் குறித்து தனது கருத்தினை கூறிய காஜல், ‘சாக்ஷி ரகசிய அறையில் வைக்கப்படலாம். சரவணன் இந்த வாரம் எலிமினேட் ஆகலாம். இதை நான் கூறிவிட்டதால் ஷோவில் நடக்காது’ என்றும் காஜல் தெரிவித்துள்ளார்.
BIGG BOSS TAMIL 3 : சீக்ரெட் ரூமில் சாக்ஷி? - முன்னாள் பிக் பாஸ் பிரபலம் PREDICTS வீடியோ