www.garudabazaar.com

Official: இந்த வாரம் வீட்டை விட்டு 'வெளியேறியது' இவர் தான்... ரசிகர்கள் அதிர்ச்சி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் இருந்து இதுவரை ரேகா, வேல்முருகன் என இருவர் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். ஆஜீத் முறை வந்தபோது அவர் தன்னிடம் இருந்த எவிக்ஷன் பிரீ பாஸை வைத்து தப்பித்து விட்டார். இந்த நிலையில் இந்த வாரம் யார் வீட்டைவிட்டு வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.

Bigg Boss Tamil 4: Who is Eliminated this week?, Read here!

சனம், பாலாஜி, ஆரி, சுரேஷ் சக்கரவர்த்தி, அர்ச்சனா, சோம், அனிதா ஆகியோர் இந்த வாரம் சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டனர்.இதில் அர்ச்சனா அல்லது சோம் இருவரில் ஒருவர் வீட்டைவிட்டு வெளியேற வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டது. ஆனால் சோம்க்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது ரசிகர்களின் எண்ணமாக இருந்தது. ரேகா, வேல்முருகன் வெளியேறிய போது முன்னரே தகவல்கள் வெளியாகி விட்டன.

ஆனால் இந்த வாரம் அதுபோல உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் சுரேஷ் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் தற்போது நிகழ்ச்சியில் இருந்து சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேற்றப்பட்டு இருக்கிறார். ஆரம்பத்தில் இருந்து எக்கச்சக்க கண்டெண்ட் கொடுத்து வந்த சுரேஷ் வெளியேறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Tamil 4: Who is Eliminated this week?, Read here!

People looking for online information on Suresh Chakravarthy will find this news story useful.