www.garudabazaar.com

Video: 'சவுண்ட்' எனக்கே கேட்டுச்சு... நிஷாவுக்கு 'சப்போர்ட்' செய்து பல்ப் வாங்கிய சனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் வீட்டில் சனம் ஷெட்டி-சுரேஷ் சக்கரவர்த்தி இடையிலான சண்டை பற்றி எரிந்தது. ராஜாவாக மாறிய சுரேஷ் அரக்கர்கள் குடும்பத்தை சேர்ந்த ரம்யா பாண்டியன், நிஷா ஆகியோரை கையில் வைத்திருந்த கட்டையால் லேசாக தட்டி மிரட்டி கொண்டிருந்தார். இதேபோல அவர் சனத்தின் தலையிலும் தெரியாமல் தட்டி விட்டார்.

BB 4 Tamil: Suresh Chakravarthy really hitting Nisha's head?

முகத்தை துணி மறைத்திருந்ததால் யாரென தெரியவில்லை என விளக்கம் கொடுத்தும், பலமுறைகள் மன்னிப்பு கேட்டும் சனம் அவரை விடுவதாக இல்லை. இதை பெரிய பஞ்சாயத்து ஆக்கினார். கடைசியில் அர்ச்சனா, சுரேஷை அழைத்து சனத்திடம் ஸாரி கேட்க வைத்தார். தொடர்ந்து கன்பெக்ஷன் ரூம் சென்று பிக்பாஸிடமும் அவர் மன்னிப்பு கேட்டார்.

இந்த களேபரங்களுக்கு மத்தியில் கூட்டத்தை கூட்டிய சனம், சுரேஷ் நிஷா அக்காவை நங்கு, நங்குன்னு அடிச்சாரு சத்தம் எனக்கே கேட்டுச்சு என்றார். ஆனால் அர்ச்சனா இதுகுறித்து நிஷாவிடம் கேட்டபோது அவர் எனக்கு அவர் அடிச்சது வலிக்கல என பஞ்சாயத்தை முடித்து வைத்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் நல்லா பண்றீங்க நீங்க என கலாய்த்து வருகின்றனர். 

தொடர்புடைய இணைப்புகள்

BB 4 Tamil: Suresh Chakravarthy really hitting Nisha's head?

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.