www.garudabazaar.com

Video: பாலாவிடம் 'ஸாரி' கேட்ட சனம்... செம 'கவுண்டர்' கொடுத்த சுரேஷ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தங்க சுரங்கம் டாஸ்க்கின் போது பாலாஜி குழுவின் ஸ்ட்ரேட்டஜியை பார்த்த சனம் ஷெட்டி இப்படிலாம் துணி எடுத்து உள்ளே போகக்கூடாது என அட்வைஸ் செய்தார். இதற்கு யாருமே எதிர்பாராத வகையில் சம்யுக்தா பதிலடி கொடுத்தார். எல்லா விஷயத்திலும் உள்ளே வர்றீங்க என முதன்முறையாக சம்யுக்தா சண்டை போட்டதை பார்த்து இன்னைக்கு கண்டெண்ட் இருக்கு என ரசிகர்கள் குதூகலம் அடைந்தனர்.

Suresh Chakravarthy given befitting reply to Sanam

டாஸ்க் முடிந்து வெளியே வந்த பாலா உன்னால தான் லேட்டா ஆச்சு என சனமிடம் சண்டை போட்டார். இதையடுத்து சுரேஷ் குழுவை சேர்ந்த சனம் உள்ளிட்டவர்கள் தங்க சுரங்கத்தில் எண்ட்ரி கொடுத்தனர். அதற்கு முன் வாசலில் நின்று கொண்டிருந்த போது சனம் பாலாவிடம் ஸாரி கேட்டார். இதைக்கேட்ட சுரேஷ் மொதல்ல கேம் வெளையாடு வந்து ஸாரி கேட்டுக்கலாம் என செம கவுண்டர் கொடுத்தார்.

இந்த வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் செம டைமிங் தாத்தா என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சனம்-சம்யுக்தா சண்டையில் இது ஒரு கேம் தானே சனம் பக்கம் நியாயம் இருக்கு என சக போட்டியாளர்கள் அவருக்கு சப்போர்ட் செய்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய இணைப்புகள்

Suresh Chakravarthy given befitting reply to Sanam

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.