Bigg Boss Tamil 3 : ‘ரகசிய அறையும் இல்ல ஒன்னும் இல்ல..’ அமானுஷ்ய மீரா மிதுன் வெளியேறினார்..!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 28, 2019 11:25 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் 35ம் நாள் எபிசோடில் 4வது போட்டியாளராக மீரா மிதுன் வெளியேறினார்.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஜூன்.23ம் தேதி தொடங்கி வார வாரம் பல சுவாரஸ்யங்களுடன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் முதலாவதாக ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா ஆகியோர் வெளியேறினர்.
அவர்களை தொடர்ந்து கடந்த வாரம் எலிமினேஷனுக்கு சேரன், அபிராமி, மீரா, சரவணன், சாக்ஷி, கவின் ஆகிய 6 பேர் நாமினேட் ஆகினர். இவர்களில் சேரன், கவின், சரவணன் ஆகியோர் மக்களால் காப்பாற்றப்பட்ட நிலையில், மீரா மிதுன் வெளியேறுவதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து பிக் பாஸ் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளில் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு மீரா காரணமாக கருதப்பட்டார். கருத்துக் கூறும் பேர் வழியாக தனக்கு ஆகாதவர்கள் மீது குற்றம்சாட்டுவதை மீராவும் விடவில்லை, அவர் மீது இதே போக்கில் இருந்த மற்ற ஹவுஸ்மேட்ஸும் விடவில்லை.
பிக் பாஸ் வீட்டில் முன்னுக்கு பின் முரணாக பேசுவதை வழக்கமாக வைத்திருந்த மீரா, சமீபத்தில் நடந்த கிராமிய டாஸ்க்கில் சேரன் மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டு, அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற காரணமாக அமைந்தது.