அனல் பறக்கும் கவுதம் மேனனின் ‘ஜோஷுவா’ Classy டீசர் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 29, 2019 11:01 AM
இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் இன்று (நவ.29)ம் தேதி ரிலீசானது.

நடிகை மேகா ஆகாஷ், சசிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு தர்புக சிவா இசையமைத்துள்ளார். ஜோமோன் டி.ஜான் ஒளிப்பதிவு செய்ய வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் வழங்குகிறது.
இந்நிலையில், இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜோஷுவா - இமை போல் காக்க’ படத்தில் ‘பப்பி’ ஹீரோ வருண் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆக்ஷன் படமான இப்படத்தையும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு வரும் பிப்.14, 2020-ல் ரிலீசாகவுள்ளது.
இப்படம் குறித்து சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவுதம் மேனன், இப்படத்தின் 50% ஷூட்டிங் பணிகளை முடித்திருப்பதாகவும், வெளிநாடு லொகேஷன்களில் சில காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இப்படத்திற்காக Parkour என்ற ராணுவம் சார்ந்த பயிற்சி ஒன்றையும் நடிகர் வருண் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
இதனிடையே, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஷுவல் லுக் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. கவுதம் மேனன் ஸ்டைலில் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஜோஷுவா’ திரைப்படத்தின் மீது கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
அனல் பறக்கும் கவுதம் மேனனின் ‘ஜோஷுவா’ CLASSY டீசர் இதோ! வீடியோ