பிக்பாஸ் ஜூலி ரசிகர்களே! 'அம்மன் தாயி' படத்தில் இருந்து முக்கிய அறிவிப்பு
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Jul 16, 2019 04:59 PM
ஜல்லிக்கட்டு போராட்டங்களில் கலந்துகொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஜூலி. அவர் பங்கேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியது.
![Bigg Boss Julie's Amman Thayee trailer is out tomorrow Bigg Boss Julie's Amman Thayee trailer is out tomorrow](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/bigg-boss-julies-amman-thayee-trailer-is-out-tomorrow-photos-pictures-stills.jpg)
அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரின் கவனத்தையும் பெற்றார். அவரால் சண்டைகள், பாசப் போராட்டங்கள் என நாளுக்கு நாள் பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரஸியமாக சென்றது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அனைவரும் அறியும் பிரபலமானார். அவர் தற்போது அம்மன் தாயி என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகியிருந்தது.
இதனையடுத்து இந்த படத்தின் இரண்டாவது டிரெய்லர் நாளை (16-07-2019) அன்று வெளியாகவுள்ளது. இந்த படத்தை சந்திரஹாசன் எழுதி இயக்கவுள்ளார்.
Tags : Bigg boss, Julie, Amman Thayee