“யாருக்கும் புரியக்கூடாதுனு ஷெரீனாவோட மலையாளத்துல பேசுனேனா?”.. ஆயிஷா BREAKING INTERVIEW
முகப்பு > சினிமா செய்திகள்ஜீ தமிழின் சத்யா சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ஆயிஷா, பிக்பாஸ் தமிழ் 6வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.
பிக்பாஸ் வீட்டுக்குள் சுமார் 60 நாட்களுக்கு மேல் இருந்த ஆயிஷா, கடந்த வாரம் ஞாயிறு அன்று எலிமினேஷன் ஆனார். இந்நிலையில் பிக்பாஸில் இருந்து வெளியான ஆயிஷா, பிஹைண்ட்வுட்ஸிற்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார்.
இந்த பேட்டிவியில் முதலில் நிகழ்ச்சியின் நெறியாளர், விக்ரமன் மற்றும் அசீம் குறித்த கருத்துக்களை ஆயிஷாவிடம் கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த ஆயிஷா, கேள்வியை பாஸ் செய்யுமாறு ஜாலியாக பதில் அளித்தார். தொடர்ந்து பேசிய ஆயிஷா, “அனைவரும் விக்ரமன் மற்றும் அசீம் குறித்துதான் அதிகம் கேட்கின்றனர்.” என கேட்டார். அதற்கு நெறியாளர், “அசீமுடன் பல நேரங்களில் நல்ல ஒரு பிணைப்பு உங்களுக்கு இருந்தது, மற்ற நேரங்களில் அதிகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டீர்கள். அதேபோல நீங்கள் வெளியே வரும்போது விக்ரமன் ஏதோ சொல்ல வர, நீங்கள் “ஓகே..” என சொல்லி இருந்தீர்கள். உங்கள் பார்வையில் அசீம் மற்றும் விக்ரமன் குறித்து சொல்லுங்கள்” என கேட்கிறார்.
இதன் பின்னர் பேசும் ஆயிஷா, “நான் இதை பத்தி பிக்பாஸ்க்கு வீட்டுக்குள்ளே நிறைய பேசி இருக்கேன். வெளியே பேசுவது புதுசு இல்ல. அசீம் அண்ணாக்கு பிக்பாஸ் அப்படின்னா என்ன என்று நல்லாவே தெரியும். எல்லாம் தெரிஞ்சவரு. கரெக்டா விளையாடிட்டு இருக்காரு. எனக்கும் அவருக்கும் நடந்த உரசல்கள் எல்லாமே அவரோட கேமுக்கு நடுவுல நம்மள யூஸ் பண்ற மாதிரி ஒரு கேம் வரும். ஆனால் கேம் முடியுறப்போதான் நமக்கு ஒரு புரிதல் வரும். அவரோட ஸ்டேட்டர்ஜிக்கு நம்மளை யூஸ் பண்ணிக்கிட்டாரு அப்படிங்கற மாதிரி ஒரு ஃபீல் வரும். இது பொதுவாகவே நடக்கும்.
முதல்ல நடக்கும் போது அப்படி இப்படின்னு போயிடுச்சு. ஆனா அது தொடர்ந்துகிட்டே இருக்கிறப்பதான், அதை அவர்கிட்ட இருந்து அப்படியே அவாய்ட் பண்ண ஆரம்பிச்சேன். எனக்கும் அசீம் அண்ணாவுக்கும் முதல்ல சண்டை பெருசா வெடிச்சுருக்கும். மாத்தி மாத்தி கத்தி அந்த சண்டை பெருசா போச்சு. ஆனா அந்த டாஸ்க் முடிஞ்ச அடுத்த நிமிஷம், சாரிமா நாலு வருஷத்துல உன்ன இப்படி வாடி போடின்னு சொன்னதில்ல.. என அப்படியே நார்மலாக பேசும்போது, நானும் சரி நான் பிரச்சனை இல்லை, அப்படின்னு சொன்னேன். இவ்ளோ பேசிட்டு ஒருத்தரிடம் அடுத்த நிமிஷம் வந்து சாரி சொல்லும் போது, நமக்கும் புரியும்ல. ஓகே.. இது உங்க ப்ளேயா இருந்துச்சு.. அதுல என்னை இழுத்து விட்டீங்களா? அப்படின்னு தோணும்.” என குறிப்பிட்டார்.
மேலும் பேசியவர், “அந்த சண்டைக்கு பிறகு எங்களுக்குள் எல்லாமே நார்மல் ஆகிவிட்டது. நான் நார்மல் ஆகிவிட்டேன். ஆனால் எனக்கு அப்படி அவர்கள் பேசிவிட்டால், மீண்டும் எனக்கு அவர்களுடன் ஒரு கம்ஃபோர்ட் ஸோன் வராது. அந்த Vibe கட் ஆகிவிடும். மறுபடியும் வராது. அதுக்காக நான் மூஞ்ச காட்டிட்டு, மொறைச்சுகிட்டு, வஞ்சத்தை மனதில் வைத்துக்கொண்டு இருக்கும் நபர் கிடையாது.!” என தெரிவித்துள்ளார்.
மேலும் ஷெரீனாவுடன் மலையாளத்தில் பேசியிருந்த விஷயம் பெரிய அளவில் சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது. இது குறித்து விளக்கம் அளித்த ஆயிஷா, "பொதுவா ஒரு மலையாளி மலையாளியை பார்க்கும் போது மலையாளத்தில் பேசணும் அப்படின்ற விஷயம் ரொம்ப அட்வான்டேஜா இருக்கும். அது அப்படி.. ஒரு மாதிரி பிடிக்கும். இப்போ உங்களுக்கு வெளியூர்ல போய் ஒரு தமிழனை பார்க்கும் போது ஒரு ஃபீல் இருக்கும்ல. அது எனக்கு இருந்துச்சு. அது இல்லன்னு நான் சொல்லவே மாட்டேன். மதர் டங் மதர் லாங்குவேஜ்ல.. ஒரு ஃபீலிங் இருந்துச்சு.. அது உண்மைதான். அதனாலதான் அப்படி நாங்க பேசினோம். ஆனா மத்தவங்களுக்கு புரிய கூடாது அப்படின்னு, நாங்க மலையாளத்துல பேச கிடையாது. அது ஒரு சின்ன கம்ஃபோர்ட்தான்..” என விளக்கம் அளித்தார்.
“யாருக்கும் புரியக்கூடாதுனு ஷெரீனாவோட மலையாளத்துல பேசுனேனா?”.. ஆயிஷா BREAKING INTERVIEW வீடியோ