பிரபல சீரியல் ஹீரோவை மணமுடித்த 'பிக்பாஸ்' ரம்யா என்.எஸ்.கே

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பழம்பெரும் நடிகர் என்எஸ்கிருஷ்ணனின் பேத்தியான ரம்யா என்.எஸ்.கே தமிழ் திரையுலகில் பிரபல பாடகியாக விளங்குகிறார். இவர் கடந்த பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார்.

Bigg Boss fame Ramya NSK married to Serial Actor Sathya

இந்நிலையில் இவர் தற்போது திருமணம் செய்துகொண்டதை தனது இன்ஸ்டாகிரராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரம்யா என்.எஸ்.கே பிரபல சீரியல் நடிகரான சத்யா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

நடிகர் சத்யா விஜய் டிவியில் ஒளிபரப்பான நீலக்குயில் தொடர் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர். இவர்களது திருமணத்தில் பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர்களான நடிகை மும்தாஜ், நடிகை ஜனனி ஐயர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.