மீண்டும் பேரரசு இயக்கத்தில் தளபதி விஜய்? - விழா மேடையில் வாழ்த்து கூறிய பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் அடுத்த திரைப்படங்கள் குறித்த அறிவிப்புகள் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பை பெறும், அந்த வகையில், தளபதி விஜய் மற்றும் தல அஜித் ரசிகர்களிடையே இந்த எதிர்ப்பார்ப்பு இன்னும் சற்று கூடுதலாகவே இருக்கும்.

Thalapathy Vijay's next film director Perarasu? Jagguar Thangam

இந்நிலையில், ‘பிகில்’ திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கவிருக்கும் ‘தளபதி 64’ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இதனிடையே, சென்னையில் நடைபெற்ற ‘காதல் அம்பு’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் அப்படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருடன் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களும் பங்கேற்றனர்.

அந்த விழாவில் பேசிய ஜாக்குவார் தங்கம், ‘வந்தோரை வாழ வைக்கும் தமிழகம் என்ற கூற்றுக்கேற்ப சினிமாவிற்கு வரும் அனைவரையும் ஆதரித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இயக்குநர் பேரரசு விரைவில் விஜய்யுடன் ஒரு படத்தை இயக்கப் போகிறார்’ என கூறினார்.

ஏற்கனவே இயக்குநர் பேரரசு இயக்கத்தில் ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ உள்ளிட்ட திரைப்படங்களில் விஜய் நடித்துள்ளார். இவ்விரு திரைப்படங்களுமே குடும்ப பின்னணியில், அண்ணன் - தம்பி, அண்ணன் - தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு வெளியான ஆக்‌ஷன் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்.19ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.