சூர்யா மேடையில் கண்கலங்கிய உருக்கமான காட்சி
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 06, 2020 12:15 PM
சென்னை தி.நகரில் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை சார்பில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சூர்யா, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அகரம் மூலம் பயன்பெற்றவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

முன்னதாக பேசிய பயனாளர்கள் தங்கள் வறுமையை கடந்து கல்வியைப்பெற அகரம் எவ்வாறு உதவியது என்பது குறித்து விரிவாக விளக்கினர். படிப்பில் சிறந்து விளங்கிய அரசு பள்ளி மாணவர்களை கண்டுபிடித்து அகரம் அவர்களுக்கு தேவையான திறன்மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கி கல்லூரிகளில் படிக்க வைத்ததை குறித்து மாணவர்கள் பேசினர்.
இவர்களின் பேச்சை கேட்ட சூர்யா மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் மேடையில் கண்கலங்கினர். இதன் பிறகு பேசிய சூர்யா தனக்கு இந்த சமூகம் செய்த உதவிக்கு நன்றிசெலுத்தும் விதமாகவே அகரம் மூலம் உதவி செய்வதாக குறிப்பிட்டார்.
சூர்யா மேடையில் கண்கலங்கிய உருக்கமான காட்சி வீடியோ
Tags : Suriya