தளபதி விஜய் - ''தமிழக தாய்மார்களின் செல்லப்பிள்ளை'' - சொன்னது யார் தெரியுமா ?
முகப்பு > சினிமா செய்திகள்லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் - விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.
சத்யன் சூரியன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா அர்ஜூன் தாஸ், ஷாந்தனு, கௌரி கிஷன் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.
இந்நிலையில் பிரபல நடிகை ஹாரத்தி ரசிகர்களின் கேள்விகளுக்கு தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் விஜய்யின் புகைப்படத்தை பகிர்ந்து தளபதி விஜய் அண்ணா பற்றி கூறுங்கள் என கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அவர், 'தமிழக தாய்மார்களின் செல்லப்பிள்ளை'' என்று குறிப்பிட்டார்.
தமிழக தாய்மார்களின் செல்ல பிள்ளை!! https://t.co/aAIlVfMTSB
— Actress Harathi (@harathi_hahaha) April 1, 2020