www.garudabazaar.com

bigg boss 6 tamil : "பாத்ரூம் போகதானே பெல் அடிக்கணும்?".. ராபர்ட் மாஸ்டரிடம் சண்டைக்கு போன ஆயிஷா.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

bigg boss 6 tamil ayesha fight with robert master

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதில், பெல் அடித்துவிட்டு ராபர்ட் மாஸ்டரை கேட்காமல் வாஷ் ரூம் பக்கம் போக கூடாது என்பது விதியாக உள்ளது. ஆனால் அந்த விதியை மீறி கிச்சனில் இருந்த ஆயிஷா சென்று வாஷ் பண்ணிவிட்டு வருகிறார். பின்னர் இதுபற்றி அசீம் ஆயிஷாவிடம் பேசும்போது, தானும் நண்பர்களும் போகும்போது ராபர்ட் எதுவும் கேட்கவில்லை, ஆனால் ரூல்ஸ்படி பெல் அடித்துவிட்டு அவரிடம் கேட்டுதான் செல்ல வேண்டும் என்று சொல்கிறார்.

ஆனால் அப்போது டென்ஷனான ஆயிஷா, “எனக்கு தெரியாதே... தெரிஞ்சாதானே கேக்க முடியும். பெல் அடிக்கணும்னே தெரியாதே? கிச்சன்ல தண்ணி வரலனு அந்த வாஷ் ரூம் போனேன்” என்று சத்தமாக கூறியதுடன், ராபர்ட் மாஸ்டரிடம் போய், “மாஸ்டர், ஏன் அசீமை மட்டும் எதுவுமே கேக்கல.. நான் வாஷ் ரூம் போறதை பற்றி மட்டும் கேக்குறீங்க..” என கேட்க, அப்போது மீண்டும் ராபர்ட் ரூல்ஸை விளக்க, அதற்கு ஆயிஷா, “உச்சா போகும்போது மட்டும்தான் அந்த பெல்ல அடிச்சு கேக்கணும், வாஷ் ரூம் போகும் போது கேக்க வேணாம்னு  நெனைச்சுட்டேன்.. எனக்கு தெரியாது.. போதுமா, விடுங்க” என டென்ஷன் ஆகி கத்திவிட்டார்.

தொடர்புடைய இணைப்புகள்

bigg boss 6 tamil ayesha fight with robert master

People looking for online information on Ayesha angry, Ayesha bigg boss 6 tamil, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Robert ayesha fight will find this news story useful.