www.garudabazaar.com

BIGGBOSS: ஆத்தி சண்டை.. மோதிக்கொண்ட மகேஸ்வரி vs மணிகண்டன்.. ப்ஃரைட் ரைஸால் அனல் பறந்த வாக்குவாதம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள் மகேஸ்வரி & மணிகண்டனுக்கு நடுவே சண்டை ஏற்பட்டு விவாதம் ஆகியுள்ளது.

biggboss season 6 tamil maheshwari manikanda fried rice fight

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

biggboss season 6 tamil maheshwari manikanda fried rice fight

போட்டியாளர்கள் பல்வேறு குழுவினராக பிரிந்து செயல்படுகின்றனர். இந்நிலையில் விஜே மகேஸ்வரி & சின்னத்திரை நடிகர் மணிகண்டன் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. சமையல் அணி சார்பில் மகேஸ்வரி 20 நபர்களுக்கு உணவு சமைக்கிறார். அப்போது அங்கு வரும் மணிகண்டன் "இந்த அரிசியில் ஃப்ரைட் ரைஸ் சமைக்க முடியாது" என்கிறார்.

"இந்த அரிசியில் ஸ்மல் வருதுனா இதை கொட்டிட்டு புதுசா சமைக்கவா? பிடிக்கலைனா புகார் பண்ணுங்க கம்ப்ளைண்ட் பாக்ஸ் இருக்குல. ஏன் சமைக்கிற இடத்துக்கு வந்து  இது இல்ல அது இல்லை அது சரியில்லைனு சொல்றீங்க?" என மகேஸ்வரி கூறி அழுது கொண்டே சமையலறையை விட்டு வெளியேறி விடுகிறார்.

biggboss season 6 tamil maheshwari manikanda fried rice fight

பின்னர் அனைத்து போட்டியாளர்களும் ஷோபாவில் அமர்ந்து இது குறித்து விவாதிக்கின்றனர். அப்போது பேசும் மணிகண்டன், "அனுமதி கூட வேண்டாம் இது தான் சமைக்க போறோம் என சொல்லிட்டு போயிருக்கலாம். பிஃரைட் ரைஸ் சமைக்க போறோம் என சொல்லிட்டு போயிருக்கலாம்.

மதிய நேரம் ரசம், சாதம் வைத்து மீல்ஸ் வைச்சுருக்கலாம். மதியம் யாரும் ப்ரைட் ரைஸ் சாப்பிட மாட்டாங்க. நைட்ல ப்ஃரைட் ரைஸ் சமைச்சு கொடுத்து இருந்தா சந்தோஷம்" என மணிகண்டன் கூற பதிலுக்கு "இதை புட் ரிவ்யூல சொல்லுங்க. கிச்சன்ல வந்து சொல்லாதீங்க" என மகேஸ்வரி பதில் அளித்துள்ளார்.

biggboss season 6 tamil maheshwari manikanda fried rice fight

இந்த வாக்குவாதம் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

biggboss season 6 tamil maheshwari manikanda fried rice fight

People looking for online information on Biggboss, BIGGBOSS season 6, BIGGBOSS TAMIL, Maheshwari, Manikandan will find this news story useful.