நடிகர் சசிக்குமார் நடிப்பில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான ‘நாடோடிகள்’ திரைப்படம் சூப்பர்ஹிட்டானது. அதைத் தொடர்ந்து மீண்டும் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா ரவி, பரணி ஆகியோர் பலர் நடிப்பில் ‘நாடோடிகள் 2’ திரைப்படம் உருவாகியுள்ளது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ளார். இப்படத்தின் அனல் பறக்கும் ஆக்ஷன் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த டீசரில், ‘உனக்கு இருக்க வீரமும், வெறியும் எனக்கும் இருக்கு. இழப்பதற்கு ஒன்னும் இல்ல. நின்னா நடத்தனும், விழுந்தா செத்துறனும்னு நினைப்பவன் நான். எவனா இருந்தா முகத்துக்கு நேரா வா…’என கம்பீரமான வசனம் பேசி அசத்தியுள்ளார்.
‘உனக்கு இருக்க வெறி எனக்கு இருக்கு..’ - நட்பு, காதல், ஆக்ஷன் கலந்த ‘நாடோடிகள் 2’ டீசர் இதோ வீடியோ