'என்னை பற்றி ஆதாரமில்லாம சோஷியல் மீடியால பேசுனீங்கனா...' - பிக்பாஸ் 3 பிரபலம் எச்சரிக்கை
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 28, 2019 01:35 PM
நடிகையும் மாடலுமான மீரா மிதுன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டிற்குள் அவரால் எழுந்த சர்ச்சைகள் ஏராளம். உதாரணமாக பிக்பாஸ் சேரன் விவகாரத்தை கூறலாம்.
![Bigg Boss 3 Meera Mitun got angry about Joe Controversy Bigg Boss 3 Meera Mitun got angry about Joe Controversy](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/bigg-boss-3-meera-mitun-got-angry-about-joe-controversy-photos-pictures-stills.jpeg)
மேலும் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ஜோ என்பவர் ஊடகங்களுக்கு பேட்டியளித்து மீரா மிதுன் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்.
இந்நிலையில் மீரா மிதுன் தற்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''நான் பேசியதாக ஒரு வாய்ஸ் நோட் வெளியாகியுள்ளது. அதனை நான் முழுமையாக கேட்கவில்லை. அதனால் அது எங்கு தவறாக பொறுத்தப்பட்டிருக்கிறது என்பது எனக்கு தெரியாது.
இதற்கெல்லாம் முதன்மை காரணம் கேரளாவைச் சேர்ந்த அஜித் ரவி என்பவர்தான். நான் பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு ஜோ என்பவரது வீடியோக்களை யூடியூபில் பார்த்தேன்.
நான் தான் முதலில் அவர்களை பற்றி புகார் அளித்தேன். அதன் பிறகே அவர்கள் என்னை பற்றி பேசத் தொடங்கினார்கள். என்னைப் பற்றி ஆதாரம் இல்லாமல் சோஷியல் மீடியாவுல பேசுனீங்கனா நான் தகுந்த நடவடிக்கை எடுப்பேன்'' என்றார்.
'என்னை பற்றி ஆதாரமில்லாம சோஷியல் மீடியால பேசுனீங்கனா...' - பிக்பாஸ் 3 பிரபலம் எச்சரிக்கை வீடியோ