சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் சேட்லைட் உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம் - விவரம் உள்ளே
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 15, 2019 03:22 PM
’இரும்புத்திரை’ படத்தை தொடர்ந்து இயக்கிகுநர் பி.எஸ்.மித்ரன் சிவகார்த்திகேயனை வைத்து ’ஹீரோ’ பட த்தை இயக்கி உள்ளார். சூப்பர் ஹீரோ ஜானரில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் இவருடன் அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் இணைந்து நடிக்கின்றனர். இந்த படம் வரும் டிசம்பர் 20ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது என்று ஏற்கெனவே தெரிவிக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் சேட்லைட் உரிமையை சன் டிவி தொலைகாட்சி நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
Tags : Sivakarthikeyan, P S Mithran