www.garudabazaar.com

திடீர் கைது… அம்மாவிடம் கெஞ்சும் வெண்பா – என்ன ஆச்சு? பாரதி கண்ணம்மாவில் பரபரப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாரதி கண்ணம்மா சீரியலின் புதிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Bharathi kannamma new episode video went viral

Also Read | ஆஹா.. கனா காணும் காலங்கள் இப்போ OTT-ல் வெப் சீரிஸா வருது! செம update

பாரதி கண்ணம்மா பிரிவு…

விஜய் டிவி சீரியல்களுள் முக்கியமான சீரியல் பாரதி கண்ணம்மா சீரியல். இதில் பாரதியாக அருண் பிரசாத்தும் கண்ணம்மாவாக ரோஷினியும் நடித்து வருகின்றனர். ரசிகர்கள் அபிமானத்தைப் பெற்ற இந்த தொடர் இதுவரை 700க்கும் மேற்பட்ட எபிசோட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பாரதி கண்ணம்மா தம்பதிகளின் குழந்தைகளான ஹேமா, பாரதியிடம் தத்துப் பிள்ளையாகவும், குழந்தை லக்ஷ்மி கண்ணம்மாவிடம் நேரடி மகளாகவும் வளர்கின்றனர். கண்ணம்மாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக பாரதி தவறாக புரிந்துகொண்டதால் இந்த பிரிவு ஏற்பட்டுள்ளது.

Bharathi kannamma new episode video went viral

வெண்பாவின் அம்மா வருகை…

இது ஒருபுறம் இருக்க, பாரதியை அடைய வேண்டி, பல தீய வேளைகளில் ஈடுபட்டு வந்த வெண்பாவுக்கும் ஒரு மர்ம அழைப்பு வந்த வண்ணம் உள்ளது. தன்னுடைய போனில் யாரோ தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருப்பதாக, வெண்பாவின் போனை எடுத்து வந்து கையில் கொடுக்கிறார் வேலை செய்யும் பெண்மணி. அப்போது அழைத்து யார் என பார்த்த வெண்பா, அதிர்ச்சியில் உறைகிறார். "அய்யய்யோ இவங்களா?. இவங்க எதுக்கு இப்போ திடீர்னு திரும்ப திரும்ப கூப்பிடுறாங்க. வாழ்க்கைல யாருகிட்ட இருந்து போன் வரவே கூடாதுன்னு நெனைச்சேனோ, அவங்க எதுக்கு என்ன கூப்பிடனும்?" என மனதில் நினைத்துக் கொள்ளும் வெண்பாவின் முகம், அச்சத்திலும் அதிர்ச்சியிலும் குழம்பி போய் கிடக்கிறது.

Bharathi kannamma new episode video went viral

இந்நிலையில் இப்போது அந்த கதாபாத்திரம் யார் என்பது தெரிய வந்துள்ளது. வெண்பாவின் அம்மா ஷர்மிளாதான் அது எனத் தெரியவந்துள்ளது. ஷர்மிளா கதாபாத்திரத்தில் 80 களின் முன்னணி கதாநாயகியும், பிக்பாஸ் போட்டியாளருமான ரேகா நடிக்கிறார். ஷர்மிளா கதாபாத்திரத்தின் அறிமுகமே பாரதியிடம் சென்று கல்யாண பத்திரிக்கை கொடுப்பது போல அதிரடியாக உருவாக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான ப்ரோமோ இப்போது வெளியாகி கவனத்தைப் பெற்றுவருகிறது. ஷர்மிளா வந்ததில் இருந்து வெண்பாவின் ஆட்டத்தை அடக்க வரிசையாக திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.

வெண்பா கைதும், கெஞ்சலும்….

Bharathi kannamma new episode video went viral

இந்நிலையில் இப்போது புதிதாக வெளியாகியுள்ள வீடியோவில் பாரதி கண்ணம்மா சீரியலின் அடுத்த எபிசோட்களின் மீதான ஆர்வத்தை அதிகமாக்கியுள்ளது. அந்த புதிய வீடியோவில் பாரதியை திடீர் என்று போலீஸ் கைது செய்கிறது. அதுகுறித்து கேட்கும் போது ”வெண்பாவின் நிபந்தனை ஜாமீன் விலக்கப்பட்டதால் கைது செய்யப்படுவதாக” சொல்கின்றனர். இதையடுத்து அனைவரும் அதிர்ச்சியாக கைதாகும் வெண்பா போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்படுகிறார். அங்கு செல்லும் ஷர்மிளாவிடம் வெண்பா ’தன்னை எப்படியாவது ஜாமீனில் எடுத்து செல்லுமாறு கூறுகிறார். ஆனால் அதற்கு ஷர்மிளா நான் ஜாமீனில் எடுக்க வேண்டும் என்றால் நீ பாரதியை மறக்கவேண்டும்’ என நிபந்தனை விதிக்கிறார். இதைக் கேட்டு வெண்பா அதிர்ச்சி ஆகிறார். இதனால் அடுத்த எபிசோட்களில் என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Also Read | விஜய் சேதுபதி- காத்ரீனா கைஃப் படத்தில் ராதிகா? போலீஸ் கெட்டப்பில் வைரல் pics!

தொடர்புடைய இணைப்புகள்

Bharathi kannamma new episode video went viral

People looking for online information on Bharathi Kannamma Serial Today, Bharathi Kannamma Serial today episode, Venba, Vijay tv will find this news story useful.