www.garudabazaar.com

தளபதி விஜய்யும், அவர் மகனும் இந்த ஷோ பார்க்குறாராங்களா?... மனம் திறந்த ஷோபா சந்திரசேகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நடிகர் விஜய்யும், அவர் மகன் ஜேசன் சஞ்சயும் பிரபல விஜய் தொலைக்காட்சியில் பார்க்கும் நிகழ்ச்சிகள் குறித்து ஷோபா சந்திர சேகர் பகிர்ந்துள்ளார்.

Thalapathy Vijay and His Son Jason Sanjay watching Vijay Tv shows

நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் தனது 65 வது படமான பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் 3 போஸ்டர்கள், Single பாடல்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Thalapathy Vijay and His Son Jason Sanjay watching Vijay Tv shows

பீஸ்ட் படத்தை ஏப்ரல் 2022ல் திரையில் வெளியிட படக்குழு முன்னர் அறிவித்தனர்.  பீஸ்ட் படத்தின் வெளியீடு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் நாள் அன்று வெளியாக உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தளபதி 66 புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதியில் இருந்து துவங்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் பாடல் காட்சிக்கு மிகப்பெரிய செட்டில் விஜய் & ரஷ்மிகா மந்தனா நடனத்துடன் படப்பிடிப்பு துவங்குகிறது. அன்றைய தினம் உகாதி, தில்ராஜூ தெலுங்கு தயாரிப்பாளர் என்பதால் அந்த தேதியை தேர்வு செய்து தொடங்குகிறார்.

Thalapathy Vijay and His Son Jason Sanjay watching Vijay Tv shows

இந்நிலையில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்சியில் கலந்துகொண்ட விஜய்யின் அம்மா, ஷோபா சந்திரசேகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய், குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பதாகவும், விஜய்யின் மனைவி சங்கீதா விஜய் டிவியின் அனைத்து நிக்ழ்ச்சிகளையும் பார்ப்பதாகவும் கூறியுள்ளார். குக் வித் கோமாளி, முதல் இரண்டு சீசன்களை போலவே, தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசனும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Thalapathy Vijay and His Son Jason Sanjay watching Vijay Tv shows

மேலும் விஜய்யும் சில நிகழ்ச்சிகளை பார்ப்பதாகவும் கூறி உள்ளார். தான் கலந்துகொண்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை விஜய்க்கு வாட்ஸ்அப் செய்ப்வதாகவும் கூறியுள்ளார். 

தளபதி விஜய்யும், அவர் மகனும் இந்த ஷோ பார்க்குறாராங்களா?... மனம் திறந்த ஷோபா சந்திரசேகர் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy Vijay and His Son Jason Sanjay watching Vijay Tv shows

People looking for online information on விஜய், Jason Sanjay, Shoba Chandra Sekhar, Vijay will find this news story useful.