www.garudabazaar.com

Marriage Marriage Marriage.. திருமண அழைப்பிதழில் இருந்த KGF 2 வசனம்.. "மாப்பிள்ளைக்கு இன்னும் Vibe அடங்கல போல.."

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கன்னட இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில், யஷ் நடிப்பில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி, 'KGF 2' திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.

KGF 2 famous dialogue in marriage invitation gone viral

Also Read | KGF CHAPTER 2 க்கு ஏன் டிக்கெட் கிடைக்க மாட்டேங்குது..? தியேட்டர் ஓனர் சொன்ன சூப்பர் தகவல்

பேன் இந்தியா திரைப்படமாக உருவாகி இருந்த KGF 2, வெளியான நாள் முதல் இன்று வரை பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை, மாநிலம் எங்கும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

குடும்பம் குடும்பமாகவும் மக்கள் திரைப்படத்தை பார்த்து ரசித்து வரும் நிலையில், இந்திய திரைப்படங்களின் வசூல் பட்டியலிலும் முக்கிய இடத்தை KGF 2 பிடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

KGF 2 famous dialogue in marriage invitation gone viral

வேற லெவல் ஹிட்..

முதல் பாகத்தை போலவே, இதிலும் ஆக்ஷன், எமோஷன் என அனைத்தும் சிறந்த வகையில், வொர்க் அவுட் ஆகியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். யஷ்ஷிற்கும் ரசிகர்கள் பட்டாளம் இந்திய அளவில் அதிகரித்து வரும் நிலையில், KGF மூன்றாம் பாகம் வரும் என்றும் படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

ஃபுல்லா KGF 2 Vibe தான்..

இதனால், அதனை எதிர்நோக்கியும் ரசிகர்கள் மிகுந்த காத்திருப்பில் இருக்கே இப்போதே ஆரம்பித்து விட்டனர். திரையரங்குகளில், KGF 2 மக்களை ஒரு வழி பண்ணி கொண்டிருக்க, இன்னொரு பக்கம் அந்த படத்தில் வரும் வசனங்களையும் தாங்களே பேசி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இணையத்தில் எங்கு திரும்பினாலும், KGF 2 Vibe மக்களை மூழ்கடித்து கொண்டிருக்க, ஒரு படி மேலே சென்றுள்ளது, புதிய திருமண ஜோடி.

KGF 2 famous dialogue in marriage invitation gone viral

Marriage Marriage Marriage..

KGF 2 படத்தில், "Violence Violence Violence, I dont like Violence" என தொடங்கும் ஒரு வசனத்தை யஷ் பேசி இருப்பார். இதனை மையப்படுத்தி, ஒரு திருமண பத்திரிக்கையில், "Marriage, Marriage, Marriage, I Don’t Like It, I Avoid, But My Relatives Like Marriage, I Can’t Avoid" என குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்து திருமணம்..

இந்த திருமண பத்திரிக்கை தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், திருமணம் வரும் மே மாதம் நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அழைப்பிதழில் இருக்கும் முகவரியின் அடிப்படையில், அது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த திருமணம் என்றும் தெரிய வருகிறது.

KGF 2 famous dialogue in marriage invitation gone viral

KGF 2 திரைப்படத்தில் நடிகர் யஷ்ஷுடன், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு, 19 வயது இளைஞர் உஜ்வால் குல்கர்னி எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | நானி - நஸ்ரியா நடிப்பில் புதிய ரொமாண்டிக் காமெடி படம்.. வெளியான ஜாலி டீசர்! எப்படி இருக்கு?

தொடர்புடைய இணைப்புகள்

KGF 2 famous dialogue in marriage invitation gone viral

People looking for online information on KGF 2 famous dialogue, KGF Chapter 2 Movie, KGF2, Marriage invitation, Prashanth Neel, Yash will find this news story useful.