www.garudabazaar.com

Video: “ராஜதந்திரம் அனைத்தும் வீணாயிடுச்சே!”.. வெண்பாவை வெச்சு செஞ்ச பாரதி குடும்பம்.. Promo!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகின் வரும் பிரபல சீரியல் பாரதி கண்ணம்மா. தற்போது பாரதி கண்ணம்மா - ராஜா ராணி சீரியலின் சங்கமம் பகுதி ஒளிபரப்பாகி வருகிறது.

Bharathi Kannamma 06-10-2021 viral promo venba akilan clash

அதன்படி பாரதியின் அப்பாவிடம் சென்று, "பாரதிக்கு திருமணம் பண்ணி வைக்க வேண்டும் என்கிற பொறுப்பு இல்லையா? எத்தனை நாளைக்கு தான் இப்படி அவன் தனியாகவே இருப்பான்?" என வெண்பா கூற, அதற்குள் அங்கு வரும் அகிலன், "அப்படியானால் கண்ணம்மா அண்ணியை சந்தேகிக்கும் பாரதி, கண்ணம்மாவுடன் வந்து மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளட்டும். அதுக்கு ஒரு முடிவு கிடைத்த பிறகு அதை பேசலாம்" என கூறுகிறான்.

அப்போது கைத்தட்டிக்கொண்டே மாஸாக எண்ட்ரி கொடுக்கும் பாரதியின் அம்மா சௌந்தர்யா, "ஒரு தங்கம் இருந்த இடத்தில் மீண்டும் இன்னொரு குப்பையை கொண்டு வந்து வைக்க முடியாது, அதேபோல் பாரதிக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கும் எண்ணமே எங்களுக்கு இல்லை" என கூறி கண்ணம்மாவை தங்கம் என்றும் வெண்பாவை குப்பை என்றும் பொருள்படும்படி மறைமுகமாக சாடுகிறார்.

மொத்தத்தில் பாரதியை திருமணம் செய்யும் நோக்கில் அனைவர் மனதையும் கலைத்துவிடும் வெண்பாவின் ப்ளான் தவிடுபொடியாகி, ‘நம் ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே! இன்னும் பயிற்சி வேண்டுமோ?’ என்று வடிவேலு சொல்லும் நிலை தான் வெண்பாவுக்கு.  இந்த காட்சி தான் இன்றைய, அதாவது ஜூன் 10-ஆம் தேதி இரவு 9 மணி எபிசோடில் ஒளிபரப்பாகிறது.

ALSO READ: “எப்டி போனனோ அப்டியே வந்துட்டேன்னு சொல்லு!”.. பிரபல சீரியலில் சினிமா நடிகரின் மாஸ் எண்ட்ரி!

Bharathi Kannamma 06-10-2021 viral promo venba akilan clash

People looking for online information on Akilan, BharathiKannamma, BharathiKannamma BarathiKannamma VijayTelevision, Tv Serial, TV Shows, Venba will find this news story useful.