Reliable Software
www.garudabazaar.com

90ஸ் கிட்ஸ் மறக்க முடியுமா இவங்கள? பிரபல சீரியலில் மாஸ் எண்ட்ரி கொடுத்த 'மெட்டி ஒலி' சாந்தி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் பரத் கதாநாயகனாக நடித்த எம்டன் திரைப்படத்தை இயக்கியவர் இயக்குநர் திருமுருகன்.

90s Kids metti oli fame shanthi mass entry in tv serial

இவர் மெட்டி ஒலி என்கிற மிக பிரபலமான சீரியலையும் முன்னதாக இயக்கிய திருமுருகன் பின்னாட்களில் நாதஸ்வரம், கல்யாண வீடு என தனது ஹிட் சீரியல்களை தொடர்ச்சியாக கொடுத்து வந்தாலும் கூட மெட்டி ஒலியை யாரும் மறந்துவிட முடியாது.

இன்றைய தமிழ் சீரியல்களின் உச்ச நட்சத்திரங்கள் பலரும் சங்கமித்த ஒரே சீரியலாக புகழ்பெற்ற மெட்டி ஒலி சீரியலின் புகழுக்கு அதன் அறிமுக பாடலான அம்மி அம்மி அம்மி மிதிச்சு பாடலும், அதில் நடனம் ஆடிய பிரபல நடன மங்கை சாந்தியும் கூடுதல் காரணம் எனலாம்.

90s Kids metti oli fame shanthi mass entry in tv serial

ஆம்,  இந்த சீரியலின் அந்த பாடலில் நடமாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்தான் நடிகையும் மற்றும் நடன மாஸ்டருமான சாந்தி. இவர் தமிழில் வெளியான `கிழக்கு வாசல்' என்கிற திரைப்படத்தில் டான்ஸ் குரூப்பில் ஒருவராக நடனமாட தொடங்கி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி போன்ற பல மொழி பாடல்களிலும் முன்னணி நடிகர்களுடன் நடனம் ஆடியிருக்கிறார்.

90s Kids metti oli fame shanthi mass entry in tv serial

பின்னர் திரைப்படங்களிலும் சீரியல்களிலும் தோன்றிய சாந்தி, தற்போது சன்.டிவி.யில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நேற்றைய (மே 17, 2021) எபிசோடில் மாஸாக எண்ட்ரி கொடுத்துள்ளார். 90ஸ் கிட்ஸால் மறக்க முடியாத மெட்டி ஒலி நடன மாஸ்டர் சாந்தியை மீண்டும் இப்படி மாஸாக பார்த்ததும் நம் 90ஸ் புள்ளிங்கோக்கள் உற்சாகம் ஆகிவிட்டனர். 

ALSO READ: பெரும் சோகம்!! இயக்குநர் ஷங்கரின் தாயார் சென்னையில் காலமானார்.

தொடர்புடைய இணைப்புகள்

90s Kids metti oli fame shanthi mass entry in tv serial

People looking for online information on Kannana Kanne, MettiOli, Shanthi, Sun TV, Tv Serial will find this news story useful.