www.garudabazaar.com

"அட, நம்ம டைரக்டர் ஷங்கரா இது??.. ஆளே அடையாளம் தெரியலையே.." வைரலாகும் பழைய 'புகைப்படம்'!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், தனது ஹிந்தி பட வேலைகளில் தற்போது பிஸியாக இருந்து வருகிறார்.

ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கும் இயக்குனர் ஷங்கரின் பழைய புகைப்படம் | Unbelievable throwback viral pic of Shankar, Arjun Sarja and Madh

இன்று பல சிறந்த படைப்புகள் மூலம் தனது சினிமா பயணத்தில் பல முத்திரைகளை ஷங்கர் பதித்திருந்தாலும், இவை அனைத்திற்கும் ஜென்டில் மேன் தான் பிள்ளையார் சுழி. அர்ஜுன் மற்றும் மதுபாலா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருந்த இந்த திரைப்படம், தியேட்டர்களில், அதிக நாட்கள் ஓடி, அதிகம் கல்லா கட்டியிருந்தது.

அது மட்டுமில்லாமல், தமிழக அரசின் 4 விருதுகளையும் அள்ளியிருந்த 'ஜென்டில் மேன்' திரைப்படம், டிவியில் ஒளிபரப்பானால் இன்றும் அதை பார்க்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இந்நிலையில், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று, தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

நடிகர் அர்ஜுன் மற்றும் நடிகை மதுபாலா ஆகியோரிடம், இயக்குனர் ஷங்கர் காட்சியை விளக்குவது போல அந்த புகைப்படம் உள்ள நிலையில், முதலில் அதனை பார்க்கும் போது, இயக்குனர் ஷங்கரை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கும் இயக்குனர் ஷங்கரின் பழைய புகைப்படம் | Unbelievable throwback viral pic of Shankar, Arjun Sarja and Madh

ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கும் இயக்குனர் ஷங்கரின் பழைய புகைப்படம் | Unbelievable throwback viral pic of Shankar, Arjun Sarja and Madh

People looking for online information on Arjun Sarja, Gentleman, Shankar will find this news story useful.