www.garudabazaar.com

“எப்டி போனனோ அப்டியே வந்துட்டேன்னு சொல்லு!”.. பிரபல சீரியலில் சினிமா நடிகரின் மாஸ் எண்ட்ரி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர் தான் கண்ணான கண்ணே.

popular film actor entry in sun tv kannana kanne serial

விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் இந்த தொடரில் யுவாவாக ராகுல் ரவியும், மீராவாக நிமேஷிகாவும் நடிக்கின்றனர். முக்கியமான கதாபாத்திரத்தில் பிரபல திரைப்பட நடிகர் பப்லூ பிரித்திவிராஜ் நடிக்கிறார். இந்த தொடரில் பல அதிரடித் திருப்பங்கள் நாளுக்கு நாள் வந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இந்த சீரியலில் யுவாவின் மாமாவாக களமிறங்கியிருக்கிறார் பிரபல திரைப்பட நடிகரான லிவிங்ஸ்டன். நடிகர் லிவிங்ஸ்டன் அண்மையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடரில் எண்ட்ரி கொடுத்திருந்தார். இதேபோல் இப்போது கண்ணானே கண்ணே சீரியலிலும் எண்ட்ரி கொடுக்கும்ப்போதே, “எப்டி போனனோ அப்டியே திரும்பி வந்துட்டேன்னு சொல்லு” என்கிற வசனத்துடன் எண்ட்ரி கொடுக்கிறார்.

முன்னதாக லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா, சன் டிவியில் ஒளிபரப்பாகும் பூவே உனக்காக சீரியலில் நடித்து வந்தார். ஆனால் பின்னர் மேற்படிப்புக்கு செல்வதால், அந்த சீரியலில் இருந்து விலகினார். இதனால் அவரது கதாபாத்திரம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதும், பின்னர் அந்த சீரியலின் நாயகன் அருணும் விலக, தற்போது விஜய் டிவி பகல் நிலவு ஹீரோ அஜீம் அந்த சீரியலின் நாயகனாக நடிக்கத் தொடங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ALSO READ: "வலிமை படத்துல இருக்கீங்களா அண்ணா?".. - ரசிகருக்கு யோகிபாபுவின் Viral ரிப்ளை!

popular film actor entry in sun tv kannana kanne serial

People looking for online information on KannaneKanne, Livingston will find this news story useful.