பிரபுதேவா படத்தில் சல்மான் கானுக்கு வில்லனாகும் தமிழ் ஹீரோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘தபங் 3’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், தனது அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பினை சல்மான் கான் வெளியிட்டார்.

Bharath to play baddie in Salman Khan and Prabhu Deva's Radhe

பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தபாங் 3’ திரைப்படத்தில் சோனாக்ஷி சின்ஹா, அர்பாஸ் கான், மஹி கில், கிச்சா சுதீப் ஆகியோர் நடித்துள்ளனர். ‘Wanted' திரைப்படத்திற்கு பின் 10 ஆண்டுகள் கழித்து சல்மான் கான் மற்றும் பிரபுதேவா கூட்டணி அமைந்துள்ளது. ‘தபங்’ சீரிஸின் மூன்றாம் பாகமாக உருவாகியுள்ள இப்படத்தை சல்மான் கான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் பேனரில் தயாரித்துள்ளார்.

நடனப்புயல் பிரபுதேவா இயக்கத்தில் ‘சுல்புல் பாண்டே’ என்ற கதாபாத்திரத்தில் சல்மான் நடித்துள்ள ‘தபங் 3’ திரைப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடா என 4 மொழிகளில் வரும் டிசம்பர்.20ம் தேதி ரிலீசாகிறது. இந்த படத்தின் அனைத்து மொழிகளையும் தமிழகத்தில் பிரபல தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்நிலையில், சல்மான் கான் நடிக்கும் அடுத்த திரைப்படத்தையும் பிரபுதேவாவே இயக்குகிறார். ‘ராதே’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சல்மானுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். மேலும், ஜாக்கி ஷ்ரோஃப், சொஹைல் கான், ரந்தீப் ஹோண்டா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இவர்களை தொடர்ந்து இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த ‘காதல்’ பட ஹீரோ பரத் நடிக்கிறார்.

‘ராதே’ திரைப்படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தற்போது நடிகர் பரத்தும் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார்.