Bigil USA Desk Others

தளபதி விஜய்யின் இந்த சூப்பர் ஹிட் படங்களை ரீமேக் செய்ய விரும்பும் சல்மான் கான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருக்கும் படம் 'பிகில்'. அட்லி இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

Salman Khan speaks about Thalapathy Vijay's Theri and Thirupaachi

ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் பிரபு தேவா இயக்கத்தில் சல்மான் கான் 'தபாங் 3' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபலப்படுத்தும் விதமாக படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் தமிழ் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அவரிடம் தளபதி விஜய்யின் எந்த படத்தை ரீமேக் செய்யவிரும்புகிறீர்கள் என் கேட்கப்பட்டது. இங்கே தமிழ் படங்கள் எல்லாம் டப் ஆகி சேனல்களில் ஒளிபரப்பாகிறது. மக்கள் அதனை பார்த்துவிடுவார்கள். விஜய்யின் 'தெறி', மற்றும் 'திருப்பாச்சி' படங்களை பற்றி பிரபு தேவாவிடம் தெரிவித்திருந்தேன்'' என்றார்.

தளபதி விஜய்யின் இந்த சூப்பர் ஹிட் படங்களை ரீமேக் செய்ய விரும்பும் சல்மான் கான் வீடியோ