www.garudabazaar.com

Video: "சும்மா கிழி".. தெறிக்கவிடும் VJ பிரியங்கா.. Behindwoods விருது விழாவில் செம்ம Rocking பா.. Exclusive!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திறமைக்கு மதிப்பும் அங்கீகாரமும் தரும் Behindwoods விருது வழங்கும் விழா மக்களிடையே எப்போதும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் அண்மையில் நடந்த Behindwoods Gold Icons விழாவில் டெலிவிஷன் டிஜிட்டல் மற்றும் சமூகம் சார்ந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Behindwoods Gold Icons VJ Priyanka Singing rocking video

அந்த வகையில் விஜய் டிவி பிரியங்காவுக்கு ஒரு முக்கிய விருது வழங்கப்பட்டது. தொடக்கத்தில் சுட்டி டிவியில் தொகுப்பாளராக இருந்த பிரியங்கா அதன் பின்னர் விஜய் டிவியில் ஒல்லி பெல்லி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக பிரபலம் அடைந்தார். பின்னர் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பிரியங்கா ஏறக்குறைய அனைவர் மனதிலும் இடம்பிடித்துவிட்டார். தனக்கே உரிய கலகலப்பான பாணியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பிரியங்கா பாசிட்டிவான முறையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர். அத்துடன் Behindwoods Gold Icons விருது விழாவையும் அவரே தொகுத்து வழங்கியிருந்தார். இந்த விழா மேடையிலேயே அவர் விருது வாங்கி இருந்தது நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.

Behindwoods Gold Icons VJ Priyanka Singing rocking video

பிரியங்காவுக்கு Best Female Anchor என்கிற பெயரில் வழங்கி கௌரவிக்கப்பட்ட இந்த விருதினை விஜய் டிவியிலிருந்து திரைப்பட நடிகராக வளர்ந்த ரோபோ ஷங்கர் வழங்க பிரியங்கா பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் பேசிய ப்ரியங்கா இந்த நிகழ்வை தொகுத்து வழங்கிக் கொண்டே இந்த விருதை பெறுவது மகிழ்ச்சி என்றும் தொடர்ந்து தொகுப்பாளர் மாகாபா உடன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதும் அவருடன் பயணிப்பதும் சந்தோஷமாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

Behindwoods Gold Icons VJ Priyanka Singing rocking video

மேலும் தன்னுடைய குடும்பத்தாருக்கும் தம்முடைய விஜய் டிவி மற்றும் டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த பிரியங்கா விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஜய் கிருஷ்ணா மற்றும் ஸ்ரீநிஷா உள்ளிட்டோருடன் இணைந்து பாடல்கள் பாடினார.  இதில் அஜய் கிருஷ்ணா பிரபல பாடகர் உதித் நாராயணன் போல இமிடேட் செய்து பாடக்கூடிய திறமை படைத்தவர். அவர் உதித் நாராயணன் குரலிலேயே பாடலை பாடி அசத்தினார். இவர்களுடன் இணைந்து,  ‘வாழ்க்கையை யோசிங்கடா’ பாடலை ஜாலியாக பாடினார் பிரியங்கா. பிரியங்கா இப்படி பாடகர்களுக்கு இணையாக பாடுவார் என்பது பலருக்கும் ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் கொடுத்து இருக்கிறது.

Behindwoods Gold Icons VJ Priyanka Singing rocking video

தம்மை, தாம் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் யார் எப்படி கலாய்த்தாலும் ஒரு சிரிப்பை மட்டுமே உதிர்க்கும் சிரித்த முகம் உடைய ஒரு ஆங்கர் பிரியங்கா என ரோபோ ஷங்கர் பிரியங்காவுக்கு புகழாரம் சூட்டினார். முழு வீடியோவை இணைப்பில் காணலாம். 

VIDEO: "சும்மா கிழி".. தெறிக்கவிடும் VJ பிரியங்கா.. BEHINDWOODS விருது விழாவில் செம்ம ROCKING பா.. EXCLUSIVE! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Behindwoods Gold Icons VJ Priyanka Singing rocking video

People looking for online information on பிரியங்கா’, Priyanka Deshpande, Trending, VijayTelevision will find this news story useful.