Reliable Software
www.garudabazaar.com

சுந்தர்.சி-யின் அரண்மனை 3.. ஆர்யா, விவேக், யோகிபாபு .. மிரட்டும் First Look Motion Poster

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வந்த அரண்மனை தொடர் படங்கள் இதுவரை இரண்டு பாகங்கள் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

Aranmanai3 First Look அரண்மனை3 Trending Arya Vivek Sundar C

வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்திய இந்த திரைப்படங்களை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் மூன்றாம் பாகம் அரண்மனை3 என்கிற பெயரில் தயாராகி இருக்கிறது. இந்த படத்தையும் முந்தைய பாகங்களை இயக்கிய சுந்தர் சி இயக்க, குஷ்பு தயாரித்து இருக்கிறார்.

Aranmanai3 First Look அரண்மனை3 Trending Arya Vivek Sundar C

இதில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகிய மூன்று நடிகைகள் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் நடிகர் விவேக், நடிகர் யோகி பாபு உள்ளிட்டோர் காமெடி வேடங்களில் நடித்திருக்கின்றனர். C.சத்யா இசையமைத்திருக்கும் இந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இன்று காலை 11 மணிக்கு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிடப்பட்டுள்ளது.

நகைச்சுவை, குணச்சித்திரம் என்று எல்லாவற்றுக்குமாக ஏகப்பட்ட நடிகர்கள் பட்டாளம் இணைந்திருக்கும் இப்படத்தில் மறைந்த நடிகர் விவேக் இடம் பெற்றிருப்பது பலரையும் நெகிழவைத்துள்ளது. விவேக்கின் நகைச்சுவை நடிப்பை இந்த படத்தில் காண்பதற்கு பலரும் ஆவலாக உள்ளனர். இந்த திரைப்படத்துக்கும் முந்தைய பாகங்களைப் போலவே நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

 

ALSO READ: BiggBoss-அ வெச்சு இப்படி ஒரு புது Show வரப்போகுதா? யாருலாம் ஜோடி சேரப்போறாங்க? TrendingNow

தொடர்புடைய இணைப்புகள்

Aranmanai3 First Look அரண்மனை3 Trending Arya Vivek Sundar C

People looking for online information on Aranmanai3, Aranmanai3FLMotionPoster, Arya, AvniCineMax, அரண்மனை3, Sundar C, SundarCAranmanai3, Vivekh will find this news story useful.