www.garudabazaar.com

ஓவியாவை அக்கா என அழைத்து பிறந்த நாளுக்கு வாழ்த்திய BiggBoss4 பிரபலம்! குஷியில் ஓவியா ஆர்மி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக 100 நாட்கள் விளையாண்டு பல பிரபலங்கள் மேலும் மக்களிடையே பிரபலமாகினர்.

BiggBoss popular contestant wishes oviya birthday trending

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் உண்மை முகம், பண்பு எப்படி என்பதை மக்கள் அறிந்துகொண்டதால் அனைவரும் அவர்களை கொண்டாடி வருகின்றனர்.  இதுவரை 4 சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் நிறைவடைந்தது.

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சியின் 4வது சீசனில் ஆரி வெற்றி பெற்றார். ஆரவ் முதல் சீசனில் வெற்றி பெற்றார். பிக்பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை வென்ற நடிகை ஓவியா. அவருக்கு தான் இன்று பிறந்தநாள். இந்நிலையில் பலரும் அவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

பிக்பாஸில் இருந்து தான் நடிகை ஓவியாவுக்கான ஆர்மி தொடங்கியது. அதன் பிறகுதான் பல நடிகர்களுக்குமான ரசிகர்களை ஆர்மி என்றழைக்கும் பாங்கு பிரபலமானது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4-ல் விளையாண்டு ரன்னராக வென்ற “பாலாஜி முருகதாஸ்”, நடிகை ஓவியாவிற்கு தனது அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டரில் “பிறந்தநாள் வாழ்த்துக்கள் மைடியர் அக்கா” என்றும்  “நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்” என்றும் பாலாஜி குறிப்பிட்டுள்ளார். அதற்கு நடிகை ஓவியா, நன்றி ப்ரோ என ரிப்ளை செய்துள்ளார்.

ALSO READ: "இவங்க 2 பேரும் நம்ம லிஸ்ட்லயே இல்லயே?".. வெறித்தனமாக வெளியான BiggBossJodigal புரோமோ!

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss popular contestant wishes oviya birthday trending

People looking for online information on Biggboss, BiggBossTamil4, Oviya, Trending, Vijay Television will find this news story useful.