www.garudabazaar.com

BiggBoss-ஐ தொடர்ந்து இப்படி ஒரு நிகழ்ச்சியா?.. உறுதிப்படுத்திய வைரல் ஃபோட்டோ.. குஷியில் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் 4 சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி.

Vijay Tv BiggBoss Jodigal program Trending pic confirms

நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் இருக்கிற தமிழர்கள் மத்தியில் சென்றடைந்தது. அத்துடன் விஜய் டிவியின் ஆன்லைன் பிளாட்பார்மான ஹாட்ஸ்டாரிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த பிக் பாஸ் வீட்டுக்குள் பங்கேற்கும் போட்டியாளர்கள் 100 நாட்கள் வெளி உலகத்துடன் எவ்வித தொடர்பும் இன்றி இருக்க வேண்டும்.

இந்த நவநாகரீக, வேகமான உலகத்தில் எப்படி இப்படி இருப்பது சாத்தியம் என்கிற ஒரு புள்ளியில் அனைவருக்கும் ஒரு எதிர்பார்ப்பை கூட்டியது இந்த நிகழ்ச்சி. அந்த வகையில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நான்கு சீசன்களிலும் வென்றவர்கள் தமிழ் மக்களின் மனதில் நேரடியாக சென்று அமர்ந்தனர். முதலாவது சீசனில் நடிகர் ஆரவ் வென்றார். இரண்டாவது சீசனில் ரித்விகா வென்றார். மூன்றாவது சீசனில் முகின் ராவ் டைட்டில் வென்றார். நான்காவது சீசனில் பிரபல நடிகர் ஆரி டைட்டில் கார்டு வென்றார்.

இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் 5வது சீசன் எப்போது வரப்போகிறது என்பதில் பலரும் இப்போதிலிருந்தே ஆர்வமாக இருக்கின்றனர். இந்த சீசனை தொகுத்து வழங்கப் போவது யார் என்கிற கேள்விகளும் எழுந்திருந்தது. இதனிடையே விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை மையமாக வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த போட்டியாளர்களை கொண்டு, பிக்பாஸ் ஜோடிகள் என்கிற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்பட்டது. இது உண்மையா இல்லையா என்கிற கேள்விகள் பல்வேறு வகையிலும் பலரிடத்திலும் இருந்தன.

Vijay Tv BiggBoss Jodigal program Trending pic confirms

இந்த நிலையில் தற்போது இதை உறுதிப்படுத்தும் வகையில் பிக்பாஸ் ஜோடிகள் ஷூட்டிங் தளத்திலிருந்து டிஜே கௌதம் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியை ஆவலுடன் காண ஆர்வமாக இருக்கின்றனர். அத்துடன் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் எந்த பிக்பாஸ் பிரபலம் எந்த பிக்பாஸ் பிரபலத்துடன் ஜோடியாகப் போகிறார் என்பதுதான் பலரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

ALSO READ: பாரதி கண்ணம்மா.. ராஜா ராணி பிரபலம் பகிர்ந்த வைரல் ஃபோட்டோ.. வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Tv BiggBoss Jodigal program Trending pic confirms

People looking for online information on பிக்பாஸ், பிக்பாஸ் ஜோடிகள், BiggBossJodigal, Biggbosstamil, BiggBossTamil4, Kamal Haasan, Trending, VijayTelevision, Vijaytv will find this news story useful.